அதிமேதாவி அங்குராசு!
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!விடாதீங்க ஆவியை பிடிங்க!இது நீங்க நினைக்கிற திகில் ஆவி அல்ல. முகத்துக்கு ஆவி பிடித்தால், எந்த வகை சருமத்தினருக்கும் நல்லது. ஆவி பிடிப்பதால் முகத்திலுள்ள கண்ணுக்கு தெரியாத துவாரங்கள் திறக்கப்பட்டு, அதில் அடைந்து கிடக்கும் அழுக்குகள் வெளியேறி முகம் மற்றும் கழுத்து பகுதி புத்துணர்வு பெறுகிறது.பத்து நாட்களுக்கு ஒருமுறை இப்படி ஆவி பிடிக்கலாம். அதே போல், ஆவி பிடித்ததும், குளிர்ந்த நீரால், முகத்தை கழுவி விட வேண்டும். திறந்த துவாரங்கள் மூடி கொள்ள இது உதவும்.தலை ஏறாப் பூக்களின் தன்னிகரில்லா பயன்கள்!உலகினில் எண்ணற்ற பூக்கள் இருக்கின்றன. அதிக வாசமும், தோற்ற அழகும் கொண்டவை மனிதருக்கும், கடவுளுக்கும் வந்து சேருகிறது. மற்ற பூக்கள் மட்டமல்ல. ஒவ்வொன்றும் ஒரு சிறப்பு கொண்டவையே. நாம் சூடாத பூக்களில் எத்தனை எத்தனை மருத்துவ குணங்கள் உள்ளன. ஆம், நாம் தினமும் பயன்படுத்தும் பூக்களை விட, சில பூக்களின் மருத்துவ குணங்களை பார்க்கும் போது ஆச்சரியமாகவே இருக்கிறது. இதோ சில மலர்களும், அவற்றின் பயன்களும்...மருதாணி தூங்க வைக்கும்!மருதாணிப் பூவை தலைக்கு கீழே வைத்து படுத்தால் உடனே தூக்கம் வரும். உடலில் தாங்க முடியாத வெப்பம் இருந்தால் இப்பூவை அரைத்துப் பூசி இரண்டு மணி நேரத்திற்குப் பின் குளித்தால் உடல் சூடு குறையும். அதே போல இப்பூவை வெண் குஷ்டத்திற்கு அரைத்து பூசினால் நோய் குணமாகும்.இளைப்பை போக்கி இளைப்பாற்றும்!இலுப்பைப் பூவை காய வைத்து பொடி செய்து குடிநீரில் கலந்து குடித்தால் நீர் வேட்கை (தாகம்) தணியும். இப்பூவை பச்சையாக பால் விட்டு அரைத்து பாலில் கலந்து குடித்தால் இளைப்பு நோய் குறையும்.பித்தம் அகற்றும் பூ!அகத்திப்பூவை பச்சையாக சாப்பிட்டால் வெயிலினாலும், புகையினாலும் ஏற்படும் பித்தம், உடலில் தோன்றும் வெப்பம் ஆகியவற்றை நீக்கும்.தலைவலி கான்!தும்பைப் பூவை பசுவின் பால் விட்டு அரைத்து, சுத்தமான துணியில் நனைத்து நெற்றிப் பொட்டில் போட்டு வர தலைவலி போகும்!என்றென்றும் அன்புடன்,அங்குராசு.