உள்ளூர் செய்திகள்

அதிமேதாவி அங்குராசு!

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்துக் கொண்டாடுவோம்!மகளிருக்கு மக்காசோளம்!மக்காச் சோளத்தில், நார்ச்சத்து நிறைந்துள்ளது; மனித உடலுக்கு அன்றாட தேவை, 18.4 சதவீத நார்ச்சத்து. ஒரு கப் மக்காச்சோளம் இதை தருகிறது. மக்காச் சோளத்தில் உள்ள நார்ச்சத்து, கல்லீரலில் கொழுப்புடன் சேர்ந்து, ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. நம் நாட்டில், பெண்களுக்கு இரும்புச்சத்து குறைவாக உள்ளது. இதனால், 90 சதவீதம் பேர், ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்காச் சோளத்தில், இரும்புச் சத்து உள்ளதால், பெண்களுக்கு ஏற்ற உணவு; கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டும். மக்காச் சோளத்தில் உள்ள, வைட்டமின் - சி, நோய் எதிர்ப்பு ஆற்றல் கொண்டது. தியாமின், அதாவது, வைட்டமின் - பி1, உடலுக்கு வலு சேர்க்கிறது; பென்டோதினிக் அமிலம், அதாவது, வைட்டமின் - பி5, உடல் உறுதிக்கு உதவுகிறது. எனவே, மக்காச் சேளத்தை, காலை உணவில், பெண்கள் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.துாங்காத பொம்மை!இரவு குறித்த கதைகள், இரவில் நடக்கும் கதைகள் எப்போதுமே, சுவாரஸ்யமானவை. மாலை முழுவதும், உயிரற்ற பொம்மைகளுடன் விளையாடி, அவற்றை ஒதுக்கி வைத்து உறங்கி விடுவோம். உறங்கிய பின், இரவில் அந்த பொம்மைகளுக்கு என, ஒரு வாழ்க்கை, அவற்றுக்கு என ஒரு உலகம் இருந்தால் எப்படி இருக்கும். இதுதான், இந்த புத்தகத்தின் கரு.ஓடி ஆடி முடித்து, இரவில் உறங்குகிறாள் ஒரு சிறுமி. அதன்பின், அவளின் பேவரைட் பொம்மையான, 'பிளானட்' உயிர் பெற்று, சுவாரஸ்ய பயணத்தை துவங்குகிறது; அதற்கு, ஒரு நாயுடன் நட்பு ஏற்படுகிறது; சுவையான, குக்கீஸ் கிடைக்கிறது என, ஒரு உலகத்தை கண்முன்னே நிறுத்துகிறது இந்தப் புத்தகம்.இரவு வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதை தாண்டி, கற்பனை திறனை வளர்த்துக் கொள்ள, இந்த, 'குட் நைட் பிளானட்' என்ற ஆங்கில புத்தகம் உதவும்.ஜீமான்ஜி!கடந்த, 1995ல், ஜீமான்ஜி சினிமா வெளிவந்தது; குழந்தைகளை கவர்ந்த, கிளாசிக் படம். வித்தியாசமான உலகத்தில், வித விதமான மிருகங்கள், பிரமிப்பூட்டும் சாகசங்கள் என, குதுாகலப்படுத்தியது. இதே கதை கருவில், 2017ல் எடுக்கப்பட்ட, புதிய ஜீமான்ஜி, 'வெல்கம் டு தி ஜங்கிள்' என்ற பெயரில் வெளியாகியுள்ளது.இந்த முறை, குழந்தைகளை மட்டுமல்ல, இளைஞர்களையும் கவரும் நோக்கத்தில், புகழ் பெற்ற நடிகர்கள் டுவைன் ஜான்சன், ஜாக் பிளாக், செல்வின் ஹார்ட் போன்றவர்களையும் படத்தில் சேர்த்துக் கொண்டனர். ஆனால், ஜீமான்ஜியின் அருகில் கூட, செல்ல முடியவில்லை; காரணம், படம் சுவாரஸ்யமாக எடுக்கப்பட்டிருந்தாலும், பார்ப்பவருக்கு பரவச உணர்வை தரவில்லை.- என்றென்றும் அன்புடன், அங்குராசு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !