உள்ளூர் செய்திகள்

ரத்த தானம்!

விபத்தில் சிக்கியோர், முக்கிய அறுவை சிகிச்சை பெறுவோரை காக்கும் ரத்த தானம். உடல் உறுப்பு தானம் போல் உயிர்காப்பதில் முதன்மையானது. இந்த தானம் செய்யும் முன், கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றி பார்ப்போம்!ரத்த தானம் செய்வோருக்கு, 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். உடல் எடை, 55 கிலோவுக்கு அதிகமாக இருக்க வேண்டும். அதற்கு குறைவாக இருந்தால் தானம் செய்யும் முன், ரத்த அழுத்தத்தை பரிசோதிப்பது அவசியம். ரத்தத்தில் ஹூமோகுளோபின் அளவையும் அறிந்திருக்க வேண்டும். அது உரிய அளவில் இருந்தால் தானம் செய்யலாம்.ரத்தம் எடுக்கும் பகுதியில் போடும் பிளாஸ்திரியை ஆறு மணி நேரத்துக்கு அகற்றாமல் இருப்பது நல்லது. ரத்தம் கொடுத்த பின், 24 மணி நேரம் மது அருந்த கூடாது.சாப்பிட்ட ஒன்றரை மணி நேரத்திற்கு பின், தானம் செய்வது நல்லது. தானத்துக்கு தயாராகும் போது, மோர் போன்ற ஆரோக்கிய பானங்களை குடிக்கலாம்.ரத்த தானம் செய்ய, 10 நிமிடங்கள் போதும். தானம் செய்த பின், பழ ஜூஸ், பிஸ்கெட் போன்ற எளிய உணவுகளை சாப்பிட்டு, 15 நிமிடங்கள் ஓய்வு எடுக்க வேண்டும். பின், அன்றாட வேலைகளை தயங்காமல் செய்யலாம்.உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர், ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாதோர், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோர், பால்வினை நோய் உள்ளோர், வலிப்பு நோயாளிகள், நுரையீரல் நோய் உள்ளோர், போதை பழக்கம் உடையோர், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டோர் ரத்த தானம் செய்யக் கூடாது.- எம்.ஏ.நிவேதா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !