பாகற்காய் பச்சடி!
தேவையான பொருட்கள்:பாகற்காய் - 2 பச்சை மிளகாய் - 4இஞ்சி - 2 துண்டுஎள் - 2 தேக்கரண்டி மஞ்சள், கடுகு, உப்பு, புளி - சிறிதளவுகறிவேப்பிலை, வெல்லம், எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை:பாகற்காயை, பொடியாக நறுக்கவும்; எண்ணெய்யை சூடாக்கி, கடுகு, நறுக்கிய இஞ்சி, துண்டாக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும், பாகற்காயை போட்டு வேக வைக்கவும். பின், புளிக்கரைசல், மஞ்சள் துாள், வறுத்து பொடியாக்கிய எள், உப்பு போட்டு கொதிக்க விட்டு, வெல்லம் சேர்த்து இறக்கவும்.சுவை மிக்க, 'பாகற்காய் பச்சடி' தயார். பகல் சாப்பாட்டில், பக்க உணவாக கொள்ளலாம். நலம் காக்கும்.- எ.லட்சுமி, சென்னை.தொடர்புக்கு: 94432 80778