உள்ளூர் செய்திகள்

ஏமாற்று வேலை!

காங்கேயனும், வேங்கையனும் நடுத்தெருவில் சண்டை போட்டு கொண்டிருந்தனர். ''நீதான்டா அந்த புதையலை மறைச்சு வெச்சிட்ட...'' ''உனக்குதான் அந்த புத்தி; நீ தான் புதையலை மறைச்சி வெச்சிருக்கிற...'' இப்படியே மாறி மாறி குற்றம் சாட்டிக்கொண்டிருந்தனர்.நடமாடும் நீதிபதி நல்லமணி அந்த வழியாக வந்தார். அவரிடம், ''ஐயா... கிணறு வெட்ட போனப்போ, ஒரு புதையலை கண்டெடுத்தோம். வேற யாருக்காவது, தெரிஞ்சா, பிரச்னை வரும் என மறைத்து வைத்தோம். இப்போ, அதை காணோம்; இவன் தான் எடுத்திருக்கிறான்...'' என்றான் காங்கேயன்.வேங்கையன் அதை மறுக்க, மீண்டும் சண்டை மூண்டது. சமாதானப்படுத்திய நல்லமணி, ''புதையலை எடுத்தது வேற யாருக்காவது தெரியுமா...'' என்று கேட்டார்.'யாருக்கும் தெரியாதுங்க ஐயா...'ஒரு சேர பதிலுரைத்தனர்.''சரி... மறைச்சு வெச்ச இடம் எது...'' 'அதோ தெரிகிற மரத்தடி...' என்றனர். அங்கு சென்றார் நல்லமணி.''மறைச்ச புதையலை என்கிட்ட தந்தா... லட்ச ரூபாய் தர்றேன்...''நயமாக பேசி, 500 ரூபாய் நோட்டுகளை காட்டினார் நல்லமணி.சிறிது நேரத்தில் பானையுடன் வந்த வேங்கையன், ''இந்தாங்க புதையல்... கொடுங்க பணத்தை...'' என்றான்.புன்னகைத்தபடியே, ''புதையல் ஆசை காட்டி, பணம் பறிக்க எண்ணும் உங்களை பிடிக்க போலீஸ் வந்திட்டிருக்கு...'' என்றார்.ஓட முயன்ற இருவரையும் கிடுக்கிப்பிடி போட்டார் நல்லமணி.குழந்தைகளே... உழைப்பால் பெற்ற செல்வத்தை மட்டுமே அனுபவிக்க வேண்டும்.க.அய்யனார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !