உள்ளூர் செய்திகள்

வாயை திறக்காதீங்க!

தர்மபுரி, அதியமான் உயர்நிலைப் பள்ளியில், 1974ல், 10ம் வகுப்பு படித்த போது, தமிழாசிரியராக திருநாவுக்கரசு இருந்தார். மிகவும் கண்டிப்பானவர்; இலக்கிய சுவையுடன் பாடங்களை நடத்துவார். ஒரு நாள், 'தலைமையாசிரியர் வகுப்புக்கு வர உள்ளார்; அவர் எது கூறினாலும், சரி என்று தலையாட்டணும்; வாயை திறக்க கூடாது...' என்றார்.சொன்னது போலவே வந்த தலைமையாசிரியர், 'மாணவர்களே... என் பிறந்தநாளில், சாக்லெட் எடுத்து வந்திருக்கிறேன்; ஒவ்வொருவராக வந்து வாங்கிக் கொள்ளுங்க...' என்றார்.வரிசையில் சென்று வாங்கி, சாப்பிடாமல் கையில் வைத்திருந்தோம். சாப்பிட வலியுறுத்திய தலைமையாசிரியரிடம், 'வாயை திறக்க கூடாதுன்னு, ஆசிரியர் சொல்லிட்டார்...' என்றான் ஒரு மாணவன். அவர் விழுந்து விழுந்து சிரித்தார். அனைவரும் அந்த குதுாகலத்தில் பங்கேற்றோம். இன்றும், அந்த நிகழ்வு மனதில் பசுமையாக உள்ளது.- தீ.அசோகன், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !