உள்ளூர் செய்திகள்

செய் அல்லது செத்துமடி!

மகாத்மா - 151தேசபிதா காந்தியடிகளின் வயது 151. அவரது வாழ்வில் திருப்பம் ஏற்படுத்திய நிகழ்வுகளை காண்போம்...உண்மை மீது, காந்திக்கு பிடிப்பு ஏற்படுத்திய நாடகம், அரிச்சந்திரா. ஐரோப்பிய நாடான இங்கிலாந்து, லண்டன் நகருக்கு சட்டம் படிக்க, 1888ல் சென்றார். அங்கு புறப்படும் முன், மது, மாது, மாமிசம் தவிர்ப்பேன் என, தாயாரிடம் சத்தியம் செய்தார். அதை தீவிரமாக கடைபிடித்தார்.சட்டம் படித்த பின், தென் ஆப்ரிக்காவில், 21 ஆண்டுகள் வாழ்ந்தார். அங்கு, அவமரியாதைக்கு உள்ளாகி போராட்டங்கள் நடத்தினார். அவர், இந்தியா திரும்பிய நாள், வெளிநாடு வாழ் இந்தியர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. நாட்டு விடுதலைக்கு மட்டுமின்றி, குழந்தை திருமண முறை, தீண்டாமை கொடுமை, விதவைக் கொடுமைகளுக்கு எதிராகவும் போராடினார். காந்தியை, ஜனவரி 30, 1948ல் சுட்டுக் கொன்றார், நாதுராம் கோட்சே. அந்த நாளை, தியாகிகள் தினமாக அனுஷ்டிக்கிறோம். சர்வதேச அகிம்சை தினமாக, ஐக்கிய நாடுகள் சபை கடைபிடிக்கிறது. நவஜீவன் என்ற இதழில் குஜராத்தி மொழியில் சுயசரிதையை எழுதினார் காந்தி. ஆங்கிலத்தில், 'மை எக்ஸ்பரிமென்ட் வித் ட்ருத்' என்ற தலைப்பில் மொழி பெயர்த்தவர், மன்மோகன் தேசாய். தமிழில், 'சத்தியசோதனை' என்ற பெயரில் வெளிவந்துள்ளது.முதன்முதலில்...* 'காந்தியடிகள்' என, எழுதும் வழக்கத்தை துவக்கியவர், தமிழ்தென்றல் என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்பட்ட, தமிழறிஞர் திரு.வி.கல்யாணசுந்தரனார்* 'மகாத்மா' என அழைத்தவர், நோபல் பரிசு பெற்ற பிரபல வங்க கவிஞர் ரபீந்திரநாத் தாகூர்* 'தேசப்பிதா' என மதிப்பளித்தவர், இந்திய தேசிய படையை நிறுவிய, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்.காந்தியின்...* போராட்ட கொள்கை மிதவாதம் * அரசியல் குரு கோபால கிருஷ்ண கோகலே* வாழ்நாளில், 2338 நாட்கள் சிறையில் கழிந்தது. மகாராஷ்டிரா மாநிலம், புனா அருகே எரவாடா சிறையில் தான் அதிகமாக அடைபட்டிருந்தார் * முதல் போராட்டம், 1917ல், பீகாரில் நடந்தது. அது சாம்பரான் சத்தியாகிரகம் எனப்படுகிறது* 'வெள்ளையனே வெளியேறு' போராட்டம், 1942ல் நடந்தது. அதில், 'செய் அல்லது செத்துமடி' என முழங்கினார் மகாத்மா.- பா.கவிதா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !