எக்சோடாக்சின் தெரியுமா?
குளிர்சாதனப் பெட்டி, ஏழைகளின் இல்லங்களிலும் புகுந்து விட்டது. அமெரிக்காவில் உள்ள, ஹார்வார்ட் பல்கலைக் கழக, ஊட்டச்சத்து துறை இதை பயன்படுத்துவது பற்றி கூறியுள்ளதாவது:குளிர்சாதனப் பெட்டியில், காய்கறி, பழங்கள், பால், இட்லி மாவு போன்றவற்றை வைத்துக் கொள்ளலாம். சமைத்த உணவு, 10 மணி நேரத்தில் கெட்டு விடும். சமைத்த உணவை, மீண்டும் சூடு செய்து தான் சாப்பிடுகிறோம். சூடு செய்யும் போது, பாக்டீரியா செத்து விடுவதாக நம்புகின்றனர். அவை சாகும் முன், 'எக்சோடாக்சின்' என்ற விஷத்தை கக்குகின்றன. 100 டிகிரி வெப்பநிலைக்கு உணவை சூடாக்கினாலும், இந்த விஷம் அழிவதில்லை.