உள்ளூர் செய்திகள்

தெரிஞ்சுக்கோங்க!

மனித மூளை லட்சக்கணக்கான மெல்லிய நரம்பு செல்களால் உருவானது. மூளையைச் சுற்றியுள்ள செரிப்ரோ ஸ்பைனல் திரவத்தினுள் மூளை பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த செரிப்ரல் திரவம் அதிர்வுகளைத் தாங்கும் உபகரணமாகவும், நம் உடல்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது.தலையில் அடி விழும்போது செரிப்ரல் திரவத்தைத் தாண்டி மூளையில் அதிர்வுகள் ஏற்பட்டால் உடலின் செயல்பாடுகள், குறிப்பாக உணர்வு நரம்புகள் செயலிழந்து போகின்றன. அதனால், மயக்கமோ மூர்ச்சையோ ஏற்படுகிறது. பிறகு மூளையே அந்த அதிர்விலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறது. இதனிடைப்பட்ட காலமே மயக்கநிலை எனப்படுகிறது.தலையில் விழும் அடி பலமாக இருந்தால், 'ட்யூரா' எனப்படும் மூளையைச் சுற்றியுள்ள கடினமான தசைச் சுவரில் காயம் ஏற்பட்டு ரத்தக் கசிவோ, வீக்கமோ உருவாகலாம். அது மூளையை அழுத்துவதால் மயக்கமோ, கோமா நிலையோ ஏற்படலாம். மூளையில் ஏற்பட்டுள்ள அதிர்வின் அளவைப் பொறுத்து பார்வை மங்கல், தலைவலி, கழுத்துப் பகுதியில் வலி, அடிக்கடி சோர்வு, வாந்தி போன்றவை ஏற்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !