தெரிஞ்சுக்கோங்க!
மல்லிகை மலர்கள் மாலை நேரத்தில் ஏன் மலர்கின்றன?தாவரங்களின் தண்டுகளில் ஏற்படும் வளர்சிதை மாற்றம் மற்றும் திசுக்களில் தோன்றும் அழுத்தம் காரணமாக அத்தாவரத்திலுள்ள தட்டையான பாகங்களில் வளர்ச்சி தோன்றுகிறது. செடியின் இலைகள், மலர்களின் இதழ்கள் போன்றவை தட்டையான பாகங்களுக்கு உதாரணமாகும். தாவரங்களின் வளர்ச்சி, சுற்றுப்புறச் சூழ்நிலை மாற்றங்களிலிருந்து பெறப்படும் ஒரு சமிக்ஞையாலேயே நடைபெறுகிறது. உதாரணமாக இருளிலிருந்து வெளிச்சம் தோன்றும் போது தாமரை மலர் மலர்கிறது. மல்லிகை மலரைப் பொறுத்தவரை வெளிச்சத்திலிருந்து இருளான சூழ்நிலைக்கு மாறும்போது மலர்ச்சி நடைபெறுகிறது. மலர் இதழ்களின் மேற்புறத்தில் வளர்ச்சி தோன்றினால் மலர்களின் இதழ்கள் மலர்கின்றன. இதழ்களின் அடிப்புறத்தில் வளர்ச்சி தோன்றினால் மலரின் இதழ்கள் மேல் நோக்கி குவிந்து மூடிக் கொள்கின்றன.