உள்ளூர் செய்திகள்

முதல் நாள்...

என் அம்மா, எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும், கோவை அரசு நடுநிலைப் பள்ளியில், என்னை, ஒன்றாம் வகுப்பு சேர்ப்பதற்காக, வந்தார். நான் அழுததால், என்னை சமாதானப்படுத்தி, 'பள்ளி மணி அடித்தவுடன் வீட்டிற்கு வந்து விடு...' என்று கூறிச் சென்றார். சிறிதுநேரம் சென்றதும், இடைவேளைக்கான மணி அடித்தவுடன், குழந்தைகள், பள்ளிக்கு வெளியில் இருக்கும் கடைக்கு செல்ல ஆரம்பித்தனர். அதை பார்த்த நான், பள்ளி முடிந்தது என நினைத்து, வீட்டிற்கு வந்து விட்டேன். மறுநாள், தலைமையாசிரியரிடம் நடந்ததைக் கூறி, 'என் மகள் வீட்டிற்கு வராமல், வேறு எங்காவது போய் இருந்தால், என்ன செய்வது... இனி குழந்தைகளை உரிய அனுமதி இல்லாமல், பள்ளியை விட்டு வெளியே செல்ல அனுமதிக்காதீர்... பள்ளிக்கு, ஒரு கதவும், வாட்ச்மேனும் போடுமாறு, என் அம்மா அறிவுறுத்தினார். தலைமையாசிரியரும், முயற்சி எடுத்து, அனைத்தையும் செய்தார். பள்ளியில் நடந்த இந்த முதல் நிகழ்வை, என் வாழ்வில் என்றும் மறக்க முடியாது; இன்று நினைத்தாலும் சிரிப்பு வரும்; தற்போது என் வயது, 26.- வி.பத்மபிரியா, கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !