உள்ளூர் செய்திகள்

அவரைக்காய்!

உணவில், தனி சுவை சேர்ப்பது அவரைக்காய். இதில், கால்ஷியம், பொட்டாஷியம், நார் சத்துக்கள் அதிகம் உள்ளன. உணவில் அதிகம் சேர்த்தால், மலச்சிக்கல் பிரச்னை தீரும். வயிற்றுப் பொருமலை நீக்கும். உடல் எடையை குறைக்கும். நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும். புத்துணர்ச்சியுடன் செயல்பட உதவும். பித்தத்தால் உண்டாகும் கண் பாதிப்புகளை நீக்கும். அவரைப் பிஞ்சில், துவர்ப்பு சுவை அதிகம் உள்ளதால், ரத்தத்தை சுத்தப்படுத்தும். ரத்த நாளங்களில் தங்கும் கொழுப்பை குறைக்கும். ரத்த அழுத்தம், இதய நோய் பாதிப்பு உள்ளோர், அவரைக்காயை உணவில் சேர்த்துக் கொள்வது நலம். சர்க்கரை நோயால் உண்டாகும் மயக்கம், தலை சுற்றல், கை, கால் மரத்துப் போதல் போன்ற உபாதைகள் வராமல் தடுக்கும்.- ரா.அமிர்தவர்ஷினி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !