முருங்கைப்பூ பொடி!
தேவையான பொருட்கள்:முருங்கைப்பூ - 1 கப்எள் - 2 தேக்கரண்டிதேங்காய் துருவல் - 2 தேக்கரண்டிகாய்ந்த மிளகாய் - 4பெருங்காயத்துாள், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை:சுத்தம் செய்த முருங்கைப்பூ, எள், தேங்காய் துருவலை தனித்தனியாக மிதமான சூட்டில் வதக்கவும். வாணலியில் எண்ணெய் சூடானதும், காய்ந்த மிளகாய், பெருங்காயத்துாள் போட்டு வறுக்கவும். இவை ஆறியதும், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். ஆரோக்கியம் தரும், 'முருங்கைப்பூ பொடி!' தயார். சூடான சாதத்தில், நெய்யுடன் கலந்து பிசைந்து சாப்பிடலாம். சுவையும், ருசியும் அபாரமாக இருக்கும். - வி.கமலா, புதுச்சேரி.