உள்ளூர் செய்திகள்

பசுமரத்தாணி!

செங்கல்பட்டு மாவட்டம், மங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 2007ல், 5ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...அன்று வகுப்பாசிரியை திருபுரசுந்தரி பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது வயிற்று வலியால் பெரும் அவதி ஏற்பட்டது. ஆசிரியையிடம் கூறினால், திட்டி விடுவாரோ என்ற பயத்தில் அழுதபடியே சாய்ந்து துாங்கி விட்டேன்.இதை கவனித்து பக்கத்தில் இருந்த மாணவியரிடம், 'என்னாச்சு...' என்று பதறிக் கேட்டுள்ளார் ஆசிரியை. விபரம் அறிந்ததும், 'ஏன் என்னிடம் சொல்லவில்லை...' என்று அன்பாக கடிந்து, பரிவாக என்னை எழுப்பினார். மருந்து, மாத்திரைகள் தந்து, கனிவுடன் கவனித்துக் கொண்டார். முழு ஓய்வு எடுக்க அனுமதித்தார்.பயந்து நடுங்கியிருந்த நான், அந்த செயல் கண்டு நெகிழ்ந்தேன். வகுப்பில், யாருக்கு தலைவலி, காய்ச்சல் என உபாதைகள் ஏற்பட்டாலும், தாமதமின்றி தக்க உதவிகள் செய்து கவனித்து கொள்வார். தயக்கமின்றி உதவிகளை பெற்றோம்.எனக்கு, 24 வயதாகிறது. இல்லத்தரசியாக இருக்கிறேன். வகுப்பறையில், அந்த ஆசிரியை தந்த அரவணைப்பு பசுமரத்தாணி போல் மனதில் பதிந்து உள்ளது. நன்றியுடன் அவரை போற்றுகிறேன்.- வி.பவானி, செங்கல்பட்டு.தொடர்புக்கு: 90039 21854


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !