உள்ளூர் செய்திகள்

அளவுகோல் அடி!

திண்டுக்கல் மாவட்டம், திருமலை-ராயபுரம், அரசு மேல்நிலைப் பள்ளியில், 2010ல், 10ம் வகுப்பு படித்த போது தலைமையாசிரியராக இருந்தார், நித்தியானந்தம். கணித பாடம் நடத்துவார். கவனத்தை ஒருங்கிணைக்கும் வழிமுறையை புலப்படுத்துவார். ஒவ்வொரு பாடத்திலும், 35க்கும் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தோரை அன்று அழைத்தார். தேர்ச்சிக்கு தேவையான மதிப்பெண்ணைக் கணக்கிட்டு, அதன் அடிப்படையில் வரிசையாக நிற்க வைத்தார். மதிப்பெண் தேவைக்கு ஏற்ப, அளவு கோலால் அடித்து தண்டித்தார். எனக்கு, இரண்டு மதிப்பெண்கள் குறைவாக இருந்தன. உள்ளங்கையை மேஜை மேல் விரிக்க வைத்து இரண்டு அடி தந்தார். பின், புறங்கையில் இரண்டு தந்தார். மறுநாள், கணக்கு போட்ட போது, அது நினைவில் வந்து கவனப்படுத்தியது. நம்பிக்கையுடன் படித்து முன்னேறினேன்.தற்போது என் வயது, 29; தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறேன். குடும்பத்தில் மாதாந்திர வரவு - செலவு கணக்கு போடும் போதெல்லாம் வகுப்பறையில் வாங்கிய அடி நினைவை மீட்டி விடுகிறது. வகுப்பில் கண்டிப்புடன் கற்பித்த தலைமையாசிரியரை போற்றி வாழ்கிறேன்.- பா.மோகனா, திண்டுக்கல்.தொடர்புக்கு: 80564 52691


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !