உள்ளூர் செய்திகள்

கூம்பு நத்தை!

மெல்லுடலி இனங்களில் ஒன்று கூம்பு நத்தை. கூம்பு வடிவத்தில் அழகிய வெளித்தோற்றம் உடையது. இது அதிக விஷம் உடைய உயிரினம். இரவில் இரை தேடும். இரையாகும் உயிரினத்தின் வாசனையை அறிந்து, அதன் மீது, 'ராடுலா' என்ற பற்களால் விஷத்தை செலுத்தும். இது, அந்த உயிரினத்தின் தசை மண்டலத்தை செயலிழக்க செய்யும். பின், நிதானமாக அமர்ந்து இரையை உண்ணும். இந்த நத்தையை கண்டால், மிக கவனமாக கையாள வேண்டும்.- கே.வெங்கடராமன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !