கேரட் சட்னி!
தேவையான பொருட்கள்:கேரட் - 3பூண்டு பல் - 7காய்ந்த மிளகாய் - 5 வெங்காயம் - 3 எண்ணெய், இஞ்சி - சிறிதளவுகொத்தமல்லித்தழை, உப்பு - தேவையான அளவு.செய்முறை:வாணலியில், எண்ணெய் சூடானதும், பூண்டு பல், காய்ந்த மிளகாய், நறுக்கிய வெங்காயம், துண்டாக்கிய கேரட், இஞ்சி, கொத்தமல்லித்தழைப் போட்டு நன்கு வதக்கவும். ஆறிய பின், உப்பு, தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.சுவை மிக்க, 'கேரட் சட்னி!' தயார். இட்லி, தோசைக்கு, பக்க உணவாக தொட்டுக் கொள்ளலாம். அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுவர்.- சி.பன்னீர்செல்வம், செங்கல்பட்டு.