சுட்டீஸின் முத்து கையெழுத்து!
எனக்கு மிகவும் பிடித்த தினமலர், சிறுவர்மலருக்கு வணக்கம். நான் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறுவர் மலர் இதழின் வாசகியாக இருக்கிறேன். என் வீட்டில் உள்ள அனைவரும் சிறுவர்மலர் வாசகர்கள். இதில் வெளிவரும் தொடர்கதைகள், சிறுகதைகள் அறிவுக்கு ஒளி தருகின்றன. பிளாரன்ஸ் அவர்கள் தரும் அறிவுரைகளான ‛இளஸ்-மனஸ்' பகுதி சிறுவர்களின் சந்தேகங்களை தீர்க்கின்றன. ‛ஸ்கூல் கேம்ப்ஸ்'இல் வரும் பதிப்புகள் எல்லாம் சிறுவர்களுக்கு புது புது அனுபவங்களை தருகிறது. என் படைப்பு இந்த சிறப்புமிக்க இதழில் வருவது எனக்கு மிக்க மகிழ்ச்சி. இப்படி அனைவரின் மனம் கவர்ந்த சிறுவர்மலர் என்றும் மக்களின் மனதில் மலர்ந்திருக்கும் மலராக இருக்க வாழ்த்துக்கள்...நன்றி க.யோகஸ்ரீ 6ம் வகுப்பு, செங்குந்தர் மெட்ரிக் பள்ளி, மதுரை. தொடர்புக்கு: 95668 34297