உள்ளூர் செய்திகள்

சுட்டீஸின் முத்து கையெழுத்து!

தினமலர் சிறுவர்மலர் பொறுப்பு ஆசிரியர் அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம். ‛அழகிய கையெழுத்துப் போட்டி'யில் நான் கலந்து கொள்வதில் பெருமகிழ்வடைகிறேன்.நான் ஆங்கில மொழியில் பயின்றாலும் சிறுவர்மலரை தொடர்ந்து படித்து வருவதால் தமிழில் தங்கு தடையின்றி படிக்கவும், தெளிவாக எழுதவும் முடிகிறது.அன்னைத் தமிழை எனக்கு கற்பிக்க எண்ணி, எனது சுட்டுவிரல் பற்றி அழகுற எழுதப் பயிற்சியளித்து என்னை இவ்வுலகிற்கு அடையாளம் காட்டியவர்கள் எனது ஆரம்பப் பள்ளி ஆசிரியைகள். அவர்களை என்றும் எனது மனதில் நிறுத்தி வணங்குகிறேன்.நன்றி!இப்படிக்குதினமலர் சிறுவர் மலரினில் ஒருமலர் மு.ச.சக்தியாழினி 7ம் வகுப்பு, கதிரி மில்ஸ் மேனிலைப் பள்ளி, கோவை. தொடர்புக்கு: 77085 85111


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !