உள்ளூர் செய்திகள்

இரும்பு பெண்மணி!

ஐரோப்பிய நாடான பிரான்ஸ், பாரீஸ் நகரில் உள்ளது ஈபிள் டவர். உலகின் சிந்தனைப்போக்கை மாற்றியமைத்த பிரெஞ்சு புரட்சியின், 100ம் ஆண்டு நினைவாக, 1879ல் உருவாக்கப்பட்டது. முழுக்க தேனிரும்பால் எழுப்பப்பட்டுள்ளது. இது, 1,083 அடி உயரம் உடையது. வடிவமைத்து உருவாக்கிய பொறியாளர் அலெக்சாண்டர் கேஸ்டிவ் ஈபிள். அவரது பெயராலே, இக்கோபுரம் அழைக்கப்-படுகிறது. உள்ளூரில், 'இரும்பு பெண்மணி' என்ற செல்லப்பெயரும் உண்டு. உலகில், கட்டண நினைவுச் சின்னங்களில் அதிக பார்வை--யாளரை ஈர்த்துள்ளது. இதை, 2023ல், 60 லட்சம் பேர் கண்டுகளித்-துள்ளனர். அதிகபட்சமாக, 70 லட்சம் பேர், 2014ல் பார்த்ததாக பதிவாகியுள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து நாளொன்--றுக்கு, 25 ஆயிரம் பேர் வரை சராசரியாகப் பார்வையிடுவதாக -சமீபத்திய புள்ளி விபரம் தெரிவிக்கிறது. - நிகி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !