உள்ளூர் செய்திகள்

பொம்மை!

குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தருவது பொம்மை. இதை விரும்பும் பெரியோரும் உண்டு. அறிவு திறனை வளர்க்கிறது.பண்டைய எகிப்தியர் காலத்திலே பொம்மை செய்ய துவங்கியதாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பழங்காலத்தில் புதையுண்ட மொகஞ்சாதாரோ, ஹரப்பா நகர அகழ்வாராய்ச்சியில், பழங்கால பொம்மைகள் கண்டறியப்பட்டுள்ளன. முதன் முதலாக, மரக்கட்டைகளில் பொம்மை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பின், துணிகளிலும், காலப் போக்கில் களிமண்ணையும் உபயோகித்து செய்யப்படுகிறது.தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கிரீசில், திருமண நாளுக்கு முன் வரை, பெண்கள் பொம்மை வைத்து விளையாடுவர். கடந்த, 1960 வரை பொம்மை பெண் குழந்தைகளுக்காக தான் உருவாக்கப்பட்டது. ஆண் குழந்தைகளுக்காக முதன் முதலாக ஜி.ஐ.ஜோ., என்ற வகை பொம்மைகள் வெளி வந்தன. பொம்மையை இரண்டு வகைகளாக பிரிக்கின்றனர்.ஒன்று, அலங்கரிக்கப்பட்ட பொம்மை; மற்றொன்று, சாதாரண பொம்மை. அமெரிக்கா, கிழக்காசிய நாடான ஜப்பான் போன்றவற்றில், நவீன ரக பொம்மைகள், 19ம் நுாற்றாண்டில் வித விதமான வடிவங்களில் தயாரிக்கப்பட்டன. பிளாஸ்டிக், ரப்பர் பொருட்களால் உருவாக்கப்பட்டன. பின், எலக்ட்ரானிக் பொம்மை உற்பத்தி செய்யப்பட்டது. இந்த காலத்தில் தான், பார்பி பொம்மை அறிமுகமாகி உலகெங்கும் அபிமானத்தை பெற்றது. அடுத்து, ரோபோ மற்றும் ரிமோட்டில் இயங்கும் பொம்மைகள் அறிமுகமாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.பய உணர்வு உள்ள குழந்தைகளை, ஆறுதலாக அமைதிபடுத்துவதாக கூறுகின்றனர் உளவியல் அறிஞர்கள். குழந்தைகளுக்கு நல்ல பொம்மை கொடுத்தே நோய் தீர்த்த வரலாறும் உலகில் உண்டு. - கோவீ.ராஜேந்திரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !