உள்ளூர் செய்திகள்

வாழைப்பூ சட்னி!

தேவையான பொருட்கள்:வாழைப் பூ - 1 தக்காளி - 2காய்ந்த மிளகாய் - 5சின்ன வெங்காயம் - 12பூண்டு, வெள்ளை உளுந்து, எள், நல்லெண்ணை - தேவையான அளவு.மோர், தண்ணீர், கடுகு, கறிவேப்பிலை, கொத்துமல்லிதழை - சிறிதளவுசெய்முறை:வாழைப்பூவை சுத்தம் செய்து மோர் கலந்த தண்ணீரில் கழுவி வேக வைக்கவும். காய்ந்த மிளகாய், உளுந்து, பூண்டு, எள்ளை வறுக்கவும். இவற்றுடன் வெந்த வாழைப்பூ, நறுக்கிய தக்காளி, உரித்த வெங்காயம் போட்டு அரைக்கவும். வாணலியில் எண்ணெய் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்த விழுதை கலக்கவும். எண்ணெய் பிரிந்ததும் கொத்தமல்லிதழை துாவி இறக்கவும்.சுவையான, 'வாழைப்பூ சட்னி!' தயார். இட்லி, தோசை, சப்பாத்தி சாதத்துடன் பக்க உணவாக சாப்பிடலாம்.- ஆர்.ஜமுனாராணி, விருதுநகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !