உள்ளூர் செய்திகள்

வழிகாட்டி!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 2005ல், 11ம் வகுப்பு படித்தேன். கணித ஆசிரியையாக இருந்த சரஸ்வதி நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர். பாடங்களை சிறப்பாக கற்பிப்பார். அனைவரையும் கவரும் வகையில் பேசுவார். கனிவான பேச்சு நடையில், 'ஏன்டே...' என அழைப்பது மிகவும் பிடிக்கும். மதியம் உணவு உண்ண, 15 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்வார். மீதியிருக்கும் நேரத்தில் பயனுள்ள பாடங்கள் கற்றுத் தருவார். ஒரு நாளில் ஒரு கணக்கு என்ற வீதத்தில் பயற்சியாக தேர்வு நடத்தினார். அவை எளிதாக மனதில் பதிந்தன. கணிதம் மிக சுலபம் என்பதை உணர்ந்து ஆர்வம் கொண்டேன். அந்த ஆசிரியை காட்டிய வழியில், கல்லுாரியிலும் கணித பாடத்தை தேர்வு செய்து பட்டப் படிப்பை முடித்தேன். என் வயது, 34; தனியார் பள்ளியில் கணித ஆசிரியையாக பணியாற்றுகிறேன். கற்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தி, முறையாக பயிற்சி தந்த ஆசிரியையை போற்றுகிறேன். அவரது பாணியை பின்பற்றி, என் மாணவர்களுக்கு போதித்து மகிழ்கிறேன். - எஸ்.வனிதா, கோவில்பட்டி.தொடர்புக்கு: 86105 60139


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !