உள்ளூர் செய்திகள்

வெள்ளை நிற விலங்குகள்!

வெள்ளை நிறத்தில் சில விலங்குகளை காணலாம். இதற்கு, மெலனின் என்ற நிறமி குறைபாடு தான் காரணம். இது, 'அல்பினிசம்' எனப்படுகிறது. தோலில், 'டைரோசினேஸ்' என்ற செயல் நடைபெறா விட்டால் இக்குறைபாடு ஏற்படும்.வெள்ளை நிற விலங்குகளை பார்ப்போம்...* தென்னாப்பிரிக்காவில் அடர் காட்டில், வெள்ளை சிங்கம் உள்ளது* ஆசியாவில் மாங்குரோவ் காட்டு பகுதிகளில் வெள்ளை புலி உள்ளது* சாம்பல் கலந்த வெள்ளை அணில், அமெரிக்காவில் காணப்படுகிறது* ஆசியாவில் வெள்ளை மயில் உள்ளது. ஆப்பிரிக்கா, காங்கோ படுகையிலும் காணப்படுகிறது* அமெரிக்கா, புளோரிடா மாகாண தேசிய பூங்காவில் முதிர்ந்த வெள்ளை முதலை உள்ளது* அமெரிக்கா, செனகாவில் வெள்ளை மான்கள் உள்ளன* ஆப்ரிக்காவில் வெள்ளை காகம் காணப்படுகிறது* வெள்ளை ஒட்டகம் மத்திய கிழக்கு நாடுகளில் உண்டு* ஆஸ்திரேலியா, தாஸ்மானியா தீவில் வெள்ளை கங்காருவை பார்க்கலாம்* ஆர்டிக் பிரதேசத்தில் வாழும் வெள்ளை திமிங்கலம், 'பெலுகா' என அழைக்கப்படுகிறது.- முருகன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !