ஆத்ம திருப்தி!
ஒரு வயலில் வெங்காயம், உருளைக்கிழங்கு, தக்காளி பயிரிட்டிருந் தனர். ஒரே வயலில் விளைந்த அவை, நெருங்கிய நண்பர்களாகி விட்டன. ஒவ்வொன்றும் அதன் அதன் இருப்பிடத்தி லிருந்தே மற்றவர்களுடன் நாள் முழுவதும் ஊர்க்கதை பேசி மகிழும். நலம் விசாரித்துக் கொள்ளும்.''நமது நட்பு எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்று தெரியவில்லை. நமது நட்புக்கு அடையாளமாக ஒருவேளை ஒருவரை ஒருவர் பிரிய நேரிட்டால் கண்ணீர் விட்டு, அழுது நம் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும்,'' என்றது தக்காளி.''சீ... ஏன் இப்படி அபசகுணமாகப் பேசுகிறாய்? வாழும்போது சாவைப்பற்றி ஏன் நினைக்கிறாய்?'' என்று தக்காளியை கடிந்து கொண்டன வெங்காயமும், உருளைக்கிழங்கும்.''பிறந்தவர் மறைவது இயற்கைதானே! இதில் என்ன அபசகுணம்? நெருப்பு என்றால் வாய் சுட்டு விடுமா என்ன?'' என்றது தக்காளி.உருளை விளைந்து விட்டது. அறுவடை செய்து எடுத்துச் சென்று விட்டனர். தக்காளியும், வெங்காயமும் உருளைக்கிழங்கின் பிரிவை தாங்க முடியாமல் கதறி அழுதன. அந்த அழுகை ஓய்வதற் குள் தக்காளி பழுத்து விட்டது என்று தக்காளியையும் பறித்துச் சென்று விட்டனர்.இப்போது வெங்காயம், தக்காளிக் காகவும், உருளைக்கிழங்கிற்காகவும் சேர்த்து அழுதது. அத்துடன் இன்னொரு வருத்தமும் எழுந்தது.உருளைக்கிழங்கிற்கு நானும், தக்காளியும் அழுதோம். தக்காளிக்கு நான் அழுகிறேன். எனக்கு யார் அழுவார்கள் என்பதை நினைத்ததும் அழ ஆரம்பித்தது. ஒருநாள் வெங்காயம் விளைந்து விட்டதென்று அதையும் அறுவடை செய்து விட்டனர். அப்போதும் வெங்காயத்தின் கவலை தனக்காக அழ யாருமில்லாமல் போய்விட்டார்களே என்பதுதான்.அந்த வெங்காயத்தை ஒரு பெண்மணி கடையிலிருந்து விலைக்கு வாங்கி வீட்டிற்கு எடுத்துச் சென்றார். அரிவாள்மனையில், வெங்காயத்தை அரிந்தாள். அவள் கண்ணில் கண்ணீர் வழிந்தது. வெங்காயத்திற்கு ரொம்ப திருப்தி.'தன் மரணத்திற்காக, அழுவதற்கு ஒருவர் இருக்கிறாரே' என்று.வெங்காயத்தின் ஆசையும் நிறைவேறிவிட்டது. அதன் ஆத்மாவும் சாந்தியடைந்தது.***