தட்டப்பயறு காய்கறி வடை!
தேவையான பொருட்கள்:தட்டப்பயறு - 1 கப்காய்ந்த மிளகாய் - 3கேரட், முட்டைகோஸ், சோம்பு, சின்ன வெங்காயம் - சிறிதளவுகறிவேப்பிலை, மல்லித்தழை, உப்பு, எண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:தட்டப்பயறு தானியத்தை, தண்ணீரில் ஊற வைத்து காய்ந்த மிளகாய், சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். அதில், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், முட்டைகோஸ், கேரட், கறிவேப்பிலை, மல்லித்தழை மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசையவும். பின், வடைகளாக தட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.சத்துமிக்க, 'தட்டப்பயிறு காய்கறி வடை!' தயார். தேங்காய் சட்னி தொட்டு சாப்பிட ருசி அமோகமாக இருக்கும். அனைத்து வயதினரும் விரும்புவர்.- த.ஜெபமாது, மதுரை.