வீ டூ லவ் சிறுவர்மலர்!
என் வயது, 49; மதுரை நகரில் ஒரு உணவகத்தில் பணி செய்கிறேன். சிறிய கிராமத்தில் இருந்து தினமும் வந்து செல்கிறேன். சிறுவர்மலர் இதழை பல ஆண்டுகளாக வாசித்து வருகிறேன். அதில் வரும் சிறுகதைகள் முதல் அனைத்து பகுதிகளையும் முழுமையாக வாசித்து விடுவேன்; சிறுவர் முதல், பெரியவர் வரை எல்லாருக்கும் பயன் தருவதாக உள்ளது.கட்டுரை, 'அதிமேதாவி அங்குராசு!' போன்ற பகுதியில் பயன் மிக்க விஷயங்களை தருகிறீர்கள். அறிவூட்டுவதில் சிறந்து விளங்கும், சிறுவர்மலர் இதழ் பணி மேலும் தொடர வாழ்த்துகள்!- ஆர்.பாஸ்கர், மதுரை.