உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது, 72; பல ஆண்டுகளாக சிறுவர்மலர் வாசித்து வருகிறோம். வாசித்த எங்கள் வீட்டு குழந்தைகள் எல்லாம் பெரியவர்களாகி, சிறப்பாக வாழ்கின்றனர். இப்போது, எங்கள் குடியிருப்பு குழந்தைகள், ஒவ்வொரு சனிக்கிழமை காலையும், எங்கள் வீட்டில் குழுமி விடுவர். சிறுவர்மலர் இதழை போட்டி போட்டு வாசிப்பர். புதிர்களை ஆவலுடன் பூர்த்தி செய்வர். இதற்கு, என் கணவர் துணையாக இருப்பார்.இறுதியில், 'மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன்' பகுதி சிறப்பு ரெசிபியை தயார் செய்து கொடுப்போம். சுவைத்து கொண்டாட்டத்துடன் கலைவர். சிறுவர்மலர் இதழ் படிப்பதால், குழந்தைகளின் திறன், ஆற்றல் சிறப்பாக வெளிப்படுகிறது. அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த சனிக்கிழமையை, ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்!- ஜி.லட்சுமி, கடலுார்.தொடர்புக்கு: 99400 16090


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !