உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது, 57; தனியார் பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். தினமலர் நாளிதழை நீண்ட காலமாக, ஆர்வமுடன் படித்து வருகிறேன்-. பூங்காவனத்தில் பல வண்ண மலர்கள் பூத்து குலுங்கி மணம் வீசி அழகை வெளிப்படுத்தும். அதுபோல, சிறுவர்மலர் இதழை அலங்கரிக்கும் அனைத்து பகுதிகளும் மனம் கவரும் வகையில் உள்ளன.பள்ளி பருவத்துக்கு அழைத்து செல்லும், 'ஸ்கூல் கேம்பஸ்!' இளமை நினைவுகளை புதுப்பிக்கிறது. நம்பகம் மிக்க தகவலை தந்து, 'அதிமேதாவி அங்குராசு!' ஆட்கொள்கிறது. வாழ்க்கையை வளமாக்க உதவுகிறது, 'இளஸ் மனஸ்' வெற்றித் தொடர். புதிய வகை உணவுகளை சுவைமிக்க, 'மம்மீஸ் ெஹல்த்தி கிச்சன்!' உதவுகிறது. சிரிக்க கற்றுக் கொடுத்து வாழ்வில் ஜெயிக்க வைக்கிறது, 'மொக்க ஜோக்ஸ்!' தமாசுகள். சிறுவர், சிறுமியரின் வரைபடங்கள், 'உங்கள் பக்கம்!' பகுதியில் பரவசம் ஊட்டுகிறது. அனைத்து வயதினரின் அபிமானத்துக்கு உரியதாக விளங்கும் சிறுவர்மலர் இதழை, எத்தனை பாராட்டினாலும் தகும்.- அ.ராதா ராஜன், கோவை.தொடர்புக்கு: 91590 26138


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !