உள்ளூர் செய்திகள்

வீ டூ லவ் சிறுவர்மலர்!

என் வயது, 70; சென்னை மாநகராட்சி சுகாதாரப்பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற மருத்துவர். வீட்டில், ஆங்கில நாளிதழ் ஒன்றும், தினமலர் நாளிதழும் தவறாது வாங்குகிறோம். இணைப்பாக வரும் சிறுவர்மலர் இதழ் ஒவ்வொரு சிறுவர், சிறுமியரையும் காந்தமாய் கவர்ந்து இழுப்பதை பார்க்கிறேன். அதில், அப்படி என்ன தான் இருக்கிறது என எண்ணி படிக்கத் துவங்கினேன். இப்போது அந்த குழந்தைகளில் நானும் ஒருவராகி விட்டேன். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.இந்த இதழை படிக்கும் போது மனம் லேசாகிறது. உள்ளத்தில், தெம்பு, உற்சாகம், மகிழ்ச்சி, ஞாபக சக்தி அதிகரிப்பதை உணர்கிறேன். இவை எனக்கு கிடைத்து வரும் பெரிய நன்மைகள். எந்த செய்தியையும், 'வழவழ'வென இழுக்காமல், ரத்தின சுருக்கமாக தருவது படிக்கும் ஆர்வத்தை துாண்டுகிறது. சின்ன தகவல்கள், எளிய படக்கதை என எல்லாம் சுவையை கூட்டுகின்றன. எளிய தமாசுகளை வழங்கும், 'மொக்க ஜோக்ஸ்!' பகுதி மற்றும் புதிர் போட்டி கவர்கிறது.பள்ளி வளாக வகுப்பறை நினைவுகள் வழியாக மாணவர், ஆசிரியர்களை ஒரே நேரத்தில் இணைத்து ஊக்குவிக்கும், 'ஸ்கூல் கேம்பஸ்' கடிதங்கள் மிகவும் பாராட்டத்தக்கது. இன்றைய சமுதாயத்தை சீர்திருத்துவதில் இது மிகப்பெரிய பங்கை வகிக்கிறது. அறிவியலையும், ஒழுக்கத்தையும் ஒருங்கே ஊட்டி, உடல், உள்ளத்திற்கு வைட்டமின் சத்துக்களை அள்ளித்தருகிறது சிறுவர்மலர். என் போன்ற வயதுடையோர் படித்தால், சிறுவர் சிறுமியர் போல் மகிழ்ச்சியாக இருக்கலாம். மனம் முழுக்க நிறைந்திருக்கும், சிறுவர்மலர் இதழை பாராட்டுகிறேன்!- ஜெ.ஜாய்ஸ் திலகம், சென்னை.தொடர்புக்கு: 98415 55955


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !