விருதுகள் 2020
இசை அங்கீகாரம்ஜன., 27: சர்வதேச இசைக்கான கிராமி விருது வழங்கும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. புதுமுக பாடகி பில்லி எல்லிஷ் 5 விருதுகள் வென்றார். அடுத்து அமெரிக்க பாடகி லிசோ மூன்று விருதுகளை வென்றார். சிறந்த எழுத்தாளர்நவ., 20: சர்வதேச அளவில் சிறந்த இலக்கியத்துக்கு பிரிட்டன் சார்பில் வழங்கப்படும் 'புக்கர் விருது' இந்தாண்டு 'சுஜ்ஜி பெயின்' என்ற புத்தகத்துக்காக பிரிட்டனின் டக்ளஸ் ஸ்டூவர்ட்க்கு வழங்கப்பட்டது. மனிதாபிமானம்அமெரிக்கா வழங்கும் சிறந்த ஆசிரியர் விருதுக்கு இந்தாண்டு மஹாராஷ்டிராவின் பரிட்டேவாடி ரஞ்சித்சின் திசாலே தேர்வு. தனக்கு பரிசாக வழங்கப்பட்ட ரூ. 7.32 கோடியில், பாதியை தன்னுடன் பைனலில் பங்கேற்ற 9 பேருக்கு பகிர்ந்தளித்தார். சாகித்ய... சாதித்த ஜெயஸ்ரீபிப்., 25: மனோஜ் குரூரின் 'நிலம் பூத்து மலர்ந்த நாள்' என்ற மலையாள நுாலை தமிழில் மொழிபெயர்த்த கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது. ஆஹா ஆஸ்கார்பிப்., 10: சிறந்த ஹாலிவுட் படங்களுக்கு வழங்கப்படும் ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. சிறந்த படமாக தென்கொரியாவின் 'பாரசைட்' காமடி திரில்லர் படம் தேர்வு. இதன் இயக்குநர் போங் ஜூன் ஹோ சிறந்த இயக்குநராக தேர்வு. சிறந்த நடிகராக ஜாக்குயின் பீனிக்ஸ் (ஜோக்கர்), சிறந்த நடிகையாக ரெனி ஜெல்வேகர் (ரூடி) தேர்வு. நல்ல ஆசான்மத்திய அரசின் இந்தாண்டுக்கான நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தின் திலிப் (செஞ்சி), சரஸ்வதி (சென்னை) உட்பட 47 பேர் தேர்வு. விளைச்சலுக்கு உதவிவிவசாய துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு அமெரிக்கா சார்பில் 1987 முதல் உலக உணவு விருது வழங்கப்படுகிறது. சிறு விவசாயிகளுக்கு விளைச்சலை பெருக்க உதவியதற்காக, 2020க்கான அமெரிக்கா வாழ் இந்தியர் ரத்தன் லால் தேர்வானார். ஒகியோ உணவு பல்கலையில் பேராசிரியராக பணியாற்றுகிறார். விருதுடன் ரூ. 1.80 கோடி வழங்கப்படுகிறது. 'கேமரா' கண்கள்மே 5: உலகில் சிறந்த பத்திரிகையாளர்களுக்கு நியூயார்க்கின் கொலம்பியா பல்கலை சார்பில் ஆண்டுதோறும் புலிட்சர் விருது வழங்கப்படுகிறது. இந்தாண்டுக்கான விருதுக்கு காஷ்மீரை சேர்ந்த புகைப்படக்காரர்கள் முக்தர்கான், யாசின் தர், சன்னி ஆனந்த் தேர்வு. உயரிய கவுரவம்முன்னாள் மத்திய அமைச்சர் மறைந்த அருண் ஜெட்லி உட்பட ஏழு பேருக்கு பத்ம விபூஷண், 16 பேருக்கு பத்ம பூஷண், 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன. இதில் 34 பேர் பெண்கள்; 18 பேர் வெளிநாட்டவர் / வெளிநாட்டு வாழ் இந்தியர். 9 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 12 பேருக்கு மறைவுக்குப் பின் வழங்கப்பட்டது. கொரோனா காரணமாக காணொலி மூலம் நிகழ்ச்சி நடந்தது. நோபல் பெருமை* மருத்துவம்ஹார்வே ஜே.ஆல்டர் (அமெரிக்கா) மைக்கேல் ஹாக்டன் (பிரிட்டன்)சார்லஸ் எம்.ரைஸ் (அமெரிக்கா)ஆய்வு : ஹெப்படைடிஸ் சி வைரசை கண்டறிந்தது. * இயற்பியல் ரோஜர் பென்ரோஸ் (பிரிட்டன்) ரிச்சர்டு ஜென்ஜெல் (ஜெர்மனி) ஆன்ட்ரியா கெஸ் (அமெரிக்கா)ஆய்வு : கருந்துளை உருவாக்கம் என்பது பொதுவான சார்பியல் கோட்பாட்டின் வலுவான முன்கணிப்பு என கண்டறிந்தது. * வேதியியல்இம்மானுவேல் சார்பென்டியர்(ஜெர்மனி) ஜெனிபர் டவுட்னா (அமெரிக்கா)ஆய்வு: மரபணு செல்களை துண்டித்து மீண்டும் சேர்ப்பது குறித்த கண்டுபிடித்தல். * இலக்கியம் அமெரிக்க ஆங்கில கவிஞர் லுாயிஸ் க்ளூக். * பொருளாதாரம் பால் ஆர்.மில்க்ரோம் (அமெரிக்கா) ராபர்ட் பி.வில்சன் (அமெரிக்கா)ஆய்வு : ஏல கோட்பாட்டின் மேம்பாடு ஏலத்திற்கான புதிய வடிவமைப்பை உருவாக்கியது. * அமைதி ஐ.நா., வின் உலக உணவு திட்டம்காரணம் : உலகளவில் லட்சக்கணக்கான மக்களுக்கு உணவு வழங்குதல்.