தமிழகம்டிச., 3: நடுக்கடலில் மீன் பிடித்த நாகை, காரைக்கால் மீனவர்கள் 16 பேர், இலங்கை கடற்படையால் கைது, பின் விடுதலை. டிச., 4: ம.தி.மு.க.,வில் வைகோவுக்கு அடுத்து இருந்த நாஞ்சில் சம்பத், அ.தி.மு.க., வில் இணைந்து கொள்கை பரப்பு துணை செயலாளர் ஆனார். டிச., 9: மெரீனா கடற்கரையில் ரூ.8 கோடி செலவில், புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., நினைவிடத்தை, முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.டிச., 10: சென்னை பெருங்குடியில் பஸ் மீது லாரி மோதியதில், பஸ் படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் பலி.டிச., 13: ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற 21,920 ஆசிரியர்களுக்கு, பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார். டிச., 13: பரமக்குடியில் தமிழகத்தின் முதல் சோலார் மின்சாரப் பூங்கா, அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்து. டிச., 15: சென்னை சென்ட்ரலிலிருந்து, மதுரை, திருவனந்தபுரத்திற்கு துரந்தோ (இடைநில்லா) ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா துவக்கினார்.டிச., 17: மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை உயர் அதிகாரிகளின் மூன்று நாள் மாநாடு, முதல்வர் ஜெ., தலைமையில் சென்னையில் நடந்தது. டிச., 20: பிரபல கர்நாடக பாடகி நித்யஸ்ரீ கணவர் மகாதேவன், சென்னை அடையாறு ஆற்றில் தற்கொலை. டிச., 21: சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த எம்.ஒய்.இக்பால், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம். இவருக்குப் பதிலாக தர்மாராவ் தற்காலிகமாக நியமனம். டிச., 22: 2012 சாகித்ய அகாடமி விருதுக்கு திண்டுக்கல் செல்வராஜ் எழுதிய 'தோல்' என்ற நாவல் தேர்வு. டிச., 25: சேலம் அருகே மேச்சேரி என்ற இடத்தில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலி.
இந்தியாடிச., 5: 'சில்லரை வர்த்தகத்தில், நேரடி அன்னிய முதலீடு (எப்.டி.ஐ.,) மசோதா எதிர்க்கட்சிகள் மற்றும் வணிகர்களின் எதிர்ப்பை மீறி பார்லிமென்டில் தாக்கல். டிச., 15: இந்தியா வந்த பாக்., உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக், பிரமதர் மன்மோகன் சிங்கை சந்தித்தார். டிச., 24: ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின், அரசுமுறை பயணமாக இந்தியா வருகை.டிச., 28: டாடா குழுமத்தலைவர் பதவியி லிருந்து ரத்தன் டாடா ஓய்வு. சைரஸ் மிஸ்ட்ரி புதிய தலைவரானார்.
உலகம்
டிச., 4: பிலிப்பைன்சில் வீசிய 'போபா' என்ற சூறாவளி புயலால், 300 பேர் பலி. டிச., 9: பிரிட்டிஷ் இளவரசி கேட் மிடில்டன் குறித்து, ஆஸி., ரேடியோவில் தவறான தகவல் ஒலிபரப்பானது தொடர்பாக, இந்திய நர்ஸ் டெசிந்தா தற்கொலை. டிச., 15: பாகிஸ்தானின் பெஷாவர் விமான நிலையத்தில் நடந்த தாக்குதலில், பயங்கரவாதிகள் 5 பேர் உள்பட 8 பேர் பலி. டிச., 20: 'மிஸ் யுனிவர்ஸ் 2012' அழகியாக, அமெரிக்காவின் ஒலிவியா கல்பா தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய அழகி ஷில்பா சிங் 16வது இடம். டிச., 17: ஜப்பான் பிரதமர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளரும், முன்னாள் பிரதமருமான ஹின்சோ அபே வெற்றி பெற்றார். பிரதமராக இருந்த யோஷி ஹூகோ தோல்வி. டிச., 21: 'மாயன் காலண்டர்' நிறைவு, சூரிய புயல் பூமியை தாக்கும் என்பதை காரணம் காட்டி உலகம் அழியும் என்ற கருத்து பரப்பப்பட்டது. எதுவும் நடக்கவில்லை. டிச., 23: இத்தாலி பிரதமர் மரியோ மாண்டி, ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பார்லிமென்ட் கலைக்கப்படுவதாக அதிபர் ஜார்ஜியோ அறிவிப்பு.டிச., 26: கஜகஸ்தானில் நடந்த விமான விபத்தில் 27 பேர் பலி.
விளையாட்டுடிச. 4: மத்திய அரசு விளையாட்டு விதிகளின்படி செயல்பட்ட, இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தடை விதித்தது. டிச. 13: பெங்களூருவில் நடந்த பார்வையற்றோர் 'டுவென்டி-20' உலக கோப்பை பைனலில், பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி, சாம்பியன்.டிச. 17: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா இழந்தது.டிச. 22: இரண்டாவது 'டுவென்டி-20' போட்டியில், இந்திய அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணி தொடரை 1-1 என சமன் செய்தது.டிச. 28: ஆமதாபாத் 'டுவென்டி-20' போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி, தொடரை 1-1 என சமன் செய்தது.