டிசம்பர்
தமிழகம்
டிச.1: டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக மயில்வாகனன் நடராஜன் நியமனம்.
டிச.6: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கார் - லாரி மோதியதில் ஐயப்ப பக்தர்கள் ஐந்து பேர் பலி.
டிச.7: கச்சத்தீவு ஒப்பந்தம் முடிந்து போன கதை இந்த ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்யும் எண்ணமோ, அல்லது இலங்கை அரசுடன் பேசும் எண்ணமோ கிடையாது என்று மத்திய அரசு அறிவிப்பு.
டிச.9: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக் கான பிரத்யேக இணையதளத்தை, முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார்.
டிச.10: மீன் பிடித்தொழில் ஒழுங்குமுறை சட்டத்தை எதிர்த்து திருச்செந்தூரில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்.
டிச.14: நிர்வாக சீர்திருத்தம் மற்றும் மின் வினியோக சீரமைப்பு வசதிக்காக, உற்பத்தி, பகிர்மானம் மற்றும் மின்தொடரமைப்பு வாரியங்களாக தமிழ்நாடு மின் வாரியம் மூன்றாக பிரிக்கப்பட்டது.
* பள்ளிப் படிப்பு படிக்காமல், திறந்தவெளி பல்கலை மூலம் எம்.ஏ., படித்து, பின் சட்டப்படிப்பு முடித்த 100 வக்கீல்களின் பதிவை, தமிழ்நாடு பார் கவுன்சில் ரத்து செய்தது.
டிச.15: பவானிசாகர் தி.மு.க., எம்.எல்.ஏ.,வுக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் அமைச்சர் ராஜா கவுந்தப்பாடியில் உள்ள அவரது வீட்டில் கைது.
டிச.20: அழகுபடுத்தப்பட்ட மெரினா கடற்கரை பூங்காவை முதல்வர் கருணாநதி திறந்து வைத்தார்.
இந்தியா
டிச.7: ரஷ்யா சென்ற பிரதமர் மன்மோகன் சிங் அந்நாட்டு அதிபர் டிமிட்ரி மெட்வதேவை சந்தித்து பேசினார். சந்திப்பின் போது அணுசக்தி ஒப்பந்தம் உட்பட மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து.
டிச.9: லோக்சபாவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை, காங்., எம்.பி., போனி பிரசாத் வர்மா தரக் குறைவாக விமர்சித்ததற்காக பிரதமர் மன்மோகன் சிங் வருத்தம் தெரிவித்தார்.
டிச.10: முகாம்களில் வசிக்கும் அனைத்து தமிழர்களும் வரும் ஜன.10க்குள், அவர்களது சொந்த ஊர்களில் மறு குடியமர்த்தப்படுவர் என டில்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இலங்கை அரசு உறுதி.
* தனித் தெலுங்கானா: ஆந்திராவில் தனி தெலுங்கானா மாநிலம் கேட்டு தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் சாகும் வரை உண்ணாவிரதம் துவக்கினார். இவருடன் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டம் மற்றும் வன்முறையில் ஈடுபட்டனர். இக்கோரிக்கைக்கு மத்திய அரசு டிச.10 ல் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து, 11 நாள் உண்ணாவிரதத்தை ராவ் முடித்துக் கொண்டார். தெலுங்கானாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரப் பகுதி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டிச.13: அசாம் கவுகாத்தியில் ஒருவீட்டிலிருந்த 6 பேர் நக்சலைட்டுகளால் கொலை.
டிச.14: மேற்கு வங்க மாநில கவர்னர் கோபால் கிருஷ்ண காந்தியின் பதவி காலம் முடிந்ததையடுத்து புதிய கவர்னராக பீகார் கவர்னர் தேவானந்த் கோன்வர், கூடுதல் பொறுப்பாக நியமனம்.
டிச.16: வங்கிகள் இணைப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய அளவில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்.
* பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழுத் தலைவர் பதவியை ஜஸ்வந்த் சிங் திடீர் ராஜினாமா.
டிச.17: தனி தெலுங்கானாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரஜா ராஜ்ஜியம் கட்சித் தலைவர் சிரஞ்சீவி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார்.
டிச.18: அத்வானி விலகல்: லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் பதவியை அத்வானி டிச.18ல் ராஜினாமா செய்தார். சுஷ்மா சுவராஜ் புதிய தலைவராக பொறுப்பேற்றார். லோக்சபா, சட்டசபை தேர்தல் தோல்வி, உட்கட்சி பூசலை தொடர்ந்து கட்சியில் இளைஞர் களுக்கு வழிவிடும் வகையில் அத்வானி இம்முடிவை எடுத்தார். எனினும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள லோக்சபா, ராஜ்யசபா என இருசபைகளையும் உள்ளடக்கிய பார்லி., குழு தலைவராக அத்வானி தேர்வானார்.
டிச.21: காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெபூபா முப்திக்கு பாகிஸ்தான் செல்வதற்கான விசா அரசு மறுப்பு. பயங்கரவாதிகள் கைது: மும்பை தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிய லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த அமெரிக்காவின் டேவிட் கோல்மேன் ஹெட்லியையும், இத்திட்டத்துக்காக இந்தியாவுக்கு வந்து செல்ல, விசா ஏற்பாடு செய்த தஹவுர் ஹுசைன் ராணாவையும் அமெரிக்க எப்.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை நடத்தியதில் பல தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
உலகம்
டிச.2: உல்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவரான அரவிந்தா ராஜ்கோவா, வங்கதேசத்தில் கைது.
டிச.4: பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில், மசூதி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 39 பேர் பலியாயினர்.
டிச.5: ரஷ்யாவின் பெர்ம் நகரில் உள்ள இரவு கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 112 பேர் பலி, 134க்கும் மேற்பட்டோர் காயம்.
டிச.7: பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள மூன் மார்க்கெட் பகுதியில் அடுத்தடுத்த நிகழ்ந்த இரண்டு மனித வெடிகுண்டு தாக்குதலில் 49 ÷பர் பலி.
* கோபன்ஹேகன் மாநாடு: பருவநிலை மாற்றத்தை தடுக்க, டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் உலக சுற்றுச்சூழல் உச்சி மாநாடு டிச.7 முதல் டிச.18 வரை நடந்தது. மாநாட்டில் எந்தவித முக்கிய முடிவும் எடுக்கப்படவில்லை.
டிச.8: ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே அடுத்தடுத்து நிகழ்ந்த ஐந்து கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் மாணவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலி.
* பாகிஸ்தானின் முல்தான் நகரில் உள்ள புலனாய்வுத்துறை அலுவலகம் அருகே தி வாயந்த குண்டு வெடித்ததில் 12 பேர் பலி.
டிச.14: இத்தாலி மிலன் நகரில் நடந்த ஆளுங்கட்சி பேரணியின் போது, பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி மீது திடீரென பாய்ந்த ஒருவர் தாக்கினார். இதில் பிரதமரின் மூக்கிலும், வாயிலும் காயம் ஏற்பட்டது. தாக்கியவர் பாதுகாவலர்களால் கைது.
டிச.15: ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு விருந்தினர் மாளிகை அருகே தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தியதில், எட்டு பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் படுகாயம்.
* பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் டேராகாசிகான் பகுதியில் மார்க்கெட் அருகே காரில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததில் 20 பேர் பலி, 70 பேர் காயம்.
டிச.21: ஆயுதக் கடத்தலுக்கு புலிகள் பயன்படுத்திய கப்பல் கொழும்பு துறைமுகம் கொண்டு வரப்பட்டது.
விளையாட்டு
டிச. 1: ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரருக்கான தங்கப்பந்து விருதை, அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்சி பெற்றார்.
டிச. 2: இலங்கை அணிக்கு எதிராக மும்பையில் நடந்த டெஸ்டில், அதிவேகமாக 250 ரன்கள் விளாசி சாதனை படைத்தார் இந்தியாவின் சேவக்.
டிச. 6: இந்திய அணி, இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது.
டிச. 12: இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடரை 1-1 கணக்கில் சமன் செய்தது இந்தியா.
டிச. 15 : இலங்கை அணிக்கு எதிராக ராஜ்கோட்டில் நடந்த போட்டியில் 414 ரன்கள் குவித்து, ஒரு நாள் அரங்கில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது இந்தியா.
டிச., 19: தோனிக்கு தடை: நாக்பூரில் இலங்கை அணிக்கு எதிராக நடந்த 2 வது போட்டியில் இந்திய அணி தாமதமாக பந்துவீசியது தொடர்பாக, கேப்டன் தோனிக்கு 2 ஒரு நாள் போட்டிகளில் தடை.
டிச. 20 : இந்திய கிராண்ட்பரிக்ஸ் பாட்மின்டன் தொடரின், பெண்கள் ஒற்றையர் பிரிவில் செய்னா நேவல் சாம்பியன் பட்டம் கைப்பற்றினார்.
டிச. 21 : ஜலந்தரில் நடந்த காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின், 'பிரிஸ்டைல்' பிரிவில் இந்தியாவின் சுஷில் குமார் தங்கம் வென்றார்.