உள்ளூர் செய்திகள்

தொழில் 2020

ரூ. 20 லட்சம் கோடிமே 12: கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை சமாளிக்க, 20.97 லட்சம் கோடி ரூபாய் திட்டத்தை நான்கு கட்டமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதன் முக்கிய அம்சங்கள்; * வருமான வரியில் 25 சதவீதம் குறைப்பு * வருங்கால வைப்பு நிதிக்கு ரூ. 2500 கோடி ஒதுக்கீடு. * வாராக்கடன் பட்டியலில் உள்ள சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ. 50 ஆயிரம் கோடி கடன். * முத்ரா கடன் பெற்றவர்களுக்கு வட்டியில் சலுகை. * 3 கோடி விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி. * ஐந்தாண்டுக்கு பதில் ஓராண்டு பணி செய்தால் பணிக்கொடை தரப்படும். * 50 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ. 10 ஆயிரம் கடனுதவி.வருமான வரியில் புதுமைபிப்., 1: மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். வருமான வரி தாக்கலில் புதிய, பழைய என இரண்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யலாம்.தேன் உற்பத்தியில் யார் 'டாப்'உலகில் தேன் உற்பத்தியில் சீனா (ஆண்டுக்கு 6.5 லட்சம் டன்) முதலிடத்தில் உள்ளது. ஆறாவது இடத்தில் இந்தியா (ஆண்டுக்கு 62 ஆயிரம் டன்) உள்ளது. ஜி.எஸ்.டி., வருவாய் அக்டோபரில் ஜி.எஸ்.டி. அதிகபட்சமாக ரூ. 1.05 லட்சம் கோடி வசூலானது. புதிய தலைமைஜூலை 17: எச்.சி.எல்., நிறுவனத்தின் செயல் தலைவராக ஷிவ நாடார் மகள் ரோஷ்னி மல்கோத்ரா நியமனம். 24 மணி நேரமும்டிச., 14 : ஆர்.டி.ஜி.எஸ்., மூலம் பணத்தை 24 மணி நேரமும் அனுப்ப ரிசர்வ் வங்கி அனுமதி. ரூ. 2 லட்சம் அனுப்பலாம். 'நம்பர் 1' பணக்காரர் நவ., 25: உலக பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பெஜாஸ், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முறையே முதல் மூன்று இடங்களை பெற்றனர். இந்தியாவின் முகேஷ் அம்பானிக்கு பத்தாவது இடம். * ஜன., 8: நிதி மோசடி செய்த ஜப்பான் நிசான் கார் நிறுவன தலைவர் கார்லஸ் கோசன், மாறு வேடத்தில் லெபனான் நாட்டுக்கு தப்பினார். * ஜன., 14: ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக மைக்கேல் தேவப்ரதா பாத்ரா பொறுப்பேற்பு. * ஜன., 31: பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் இருந்து 78 ஆயிரம் பேர் ஓய்வு. * பிப்., 10: உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருக்கும் என உலக பன்னாட்டு நிதியம் கணிப்பு. * மார்ச் 5: நிதி நெருக்கடியில் சிக்கிய எஸ் வங்கி நிர்வாகத்தை, ரிசர்வ் வங்கி தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. * மார்ச் 31: ரிசர்வ் வங்கி துணை கவர்னர் விஸ்வநாதன் ராஜினாமா. * ஜூன் 24: முதலீட்டாளர்களை பாதுகாக்க நாடு முழுதும் உள்ள 1500 கூட்டுறவு வங்கிகளை, ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல். * ஜூலை 9: ஓரியண்டல், நேஷனல், யுனைட்டடு இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ரூ. 12,450 கோடி முதலீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல். * ஜூலை 13: இந்தியாவை டிஜிட்டல் மயமாக்க கூகுள் நிறுவனம் அடுத்த ஐந்து - ஏழு ஆண்டுகளில் ரூ. 75 ஆயிரம் கோடி முதலீடு செய்வதாக அறிவிப்பு. * ஜூலை 15 : ஆசிய வளர்ச்சி வங்கி துணைத்தலைவராக அசோக் லவசா பொறுப்பேற்பு. * ஆக., 25: இந்தியாவில் ௧ ஜி.பி., டேட்டா விலை உலகிலேயே குறைவு (ரூ. 6.66) என ஆய்வு தெரிவிக்கிறது. * ஆக., 31: கொரோனாவால் ஏப்ரல் - ஜூன் வரையிலான காலத்தில், நாட்டின் ஜி.டி.பி., 23.9 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்தது. * செப்., 5: எளிதாக வணிகம் செய்வதற்கான மாநிலங்களில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஆந்திரா முதலிடம் வகிக்கிறது. * செப்., 25: இந்தியாவில் உற்பத்தி, விற்பனையை அமெரிக்க இருசக்கர வாகன நிறுவனம் ஹார்லி டேவிட்சன் நிறுத்தியது. * அக்., 1: கடுகு எண்ணெய்யில் வேறு வகை சமையல் எண்ணெய்களை கலக்கக்கூடாது என உணவு பாதுகாப்பு ஆணையம் அறிவிப்பு.* அக்., 11: இந்தியாவின் முதல் ைஹட்ரஜன் எரிவாயுவில் இயங்கும் கார் சோதனை ஓட்டம் புனேயில் நிறைவு.* அக்., 22: உலகின் அதிவேகமாக செல்லும் காராக, அமெரிக்காவின் டுவதாரா ைஹப்பர் கார் சாதனை. இதன் வேகம் மணிக்கு 508.73 கி.மீ., * நவ., 22: ரிசர்வ் வங்கி டுவிட்டர் பக்கத்தை 10 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். * டிச., 8: ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் விகிதத்தை 4 சதவீதமாக நிர்ணயித்தது. * டிச., 12: இந்தியன் ஆயில் நிறுவனம் 5 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டருக்கு 'சோட்டு' என பெயரிட்டது. * டிச., 13: குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கிகள் ரூ. 2.05 லட்சம் கோடி கடன் வழங்க ஒப்புதல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !