புதிய பார்லிமென்ட்
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பார்லிமென்ட்டிற்கு பதிலாக புதிய பார்லிமென்ட் கட்ட மத்திய அரசு திட்டமிட்டது. டில்லியில் டிச. 10ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.10பிரதமரின் புதிய குடியிருப்பு வளாகம் 15 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது. அதாவது 30,351 ச.மீ., பரப்பில் அதிகபட்சம் 12 மீ., உயரத்தில், 10 நான்கு மாடிக்கட்டங்கள் கட்டப்பட உள்ளன.மூன்று மடங்கு பெரியதுநவீன கட்டடக்கலை, எரிசக்தி சேமிப்பு, உயர்ந்தபட்ச பாதுகாப்பு வசதிகள் என முக்கோண வடிவில் புதிய பார்லிமென்ட் கட்டப்படுகிறது. தற்போதைய லோக்சபா, ராஜ்யசபாவை விட மூன்று மடங்கு பெரியதாக இருக்கும்.சுரங்கப் பாதைமின்துறை அமைச்சகம் அமைந்துள்ள சக்தி பவன் என்ற இடத்தில் தான் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. இதில் எம்.பி.க்களுக்கான ஓய்வு அறைகள் இருக்கும். பழைய பார்லிமென்ட், புதிய கட்டடத்தை இணைக்க சுரங்கப் பாதை அமைக்கப்படுகிறது.பாதிப்பு இல்லைமத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், ''இப்போதுள்ள பார்லிமென்ட் திறக்கப்பட்டு 100 ஆண்டுகளை நெருங்கிக் கொண்டுள்ளது. நிலநடுக்கம், தீ விபத்து பாதுகாப்புக்கு போதிய வசதிகள் இல்லாமல் உள்ளன. அதேநேரம் புதிய கட்டடம் கட்டும் போது, பழைய பார்லிமென்டின் ஒரு செங்கல் கூட பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வோம். புதிய திட்டத்தால் ஆண்டு செலவினத்தில் ரூ. 1000 கோடி சேமிக்க வாய்ப்புள்ளது. பல்வேறு அமைச்சக துறைகள் புதிய பார்லிமென்டில் ஒருங்கிணைத்து அமைக்கப்படும்,'' என்றார். புதிய பார்லிமென்ட் 'ஸ்பெஷல்'* பரப்பளவு 64,500 சதுர மீட்டர்* கட்டுமான செலவு ரூ. 971 கோடி* நான்கு மாடிகள் இருக்கும்* 2022 ஆகஸ்ட்டில் திறக்கப்படும்.* லோக்சபாவில் 888, கூட்டுக் கூட்டத்தில் 1224, ராஜ்ய சபாவில் 384 பேர் அமரலாம்.* தற்போது லோக்சபாவில் 543, ராஜ்ய சபாவில் 245 உறுப்பினர்கள் உள்ளனர்.* பிரதமர், சபாநாயகர், ராஜ்ய சபா தலைவர்கள், பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சகம், கமிட்டி என 120 அலுவலகங்கள் அமையவுள்ளன.* எம்.பி., க்களுக்கான புதிய இருக்கைகள் தற்போதுள்ளதை விட 60 செ.மீ., நீளம், 40 செ.மீ., உயரமாக அமைக்கப்பட உள்ளன* இக்கட்டடம் நிலநடுக்கத்தை தாங்கும்.பழைய பார்லிமென்ட் சிறப்பு* பிரிட்டன் அரசு நிர்வாகத்திற்காக பார்லிமென்ட் வளாகம் கட்டப்பட்டது.* பிரிட்டனின் சர் எட்வின் லியுடென்ஸ்,சர் ஹெர்பெர்ட் பெக்கர் வடிவமைத்தனர்.* ம.பி.,யில் உள்ள சவுத் யோகினி கோயிலை மாதிரியாக வைத்து பார்லிமென்ட் கட்டப்பட்டது.* கடந்த 1921ல் பணிகள் துவங்கின. 1927ல் அப்போதைய வைஸ்ராய் இர்வின் பார்லிமென்ட் கட்டடத்தை திறந்து வைத்தார். சுதந்திரத்துக்குப் பின் இது இந்திய பார்லிமென்ட் ஆனது. அப்போதைய கட்டுமானச் செலவு ரூ. 88.4 லட்சம்.* 560 அடி விட்டம் உடைய வட்ட வடிவில் 6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.* மைய மண்டபம், ராஜ்ய சபா, லோக் சபா நுாலகங்கள் உள்ளன. ஒவ்வொரு கட்டடத்துக்கும் இடையே தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.* மைய மண்டபத்தின் குவி மாடம் 98 அடி விட்டம் உடையது. இங்கு தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அமலானது.* ராஜ்ய சபா, லோக் சபா கூட்டுக் கூட்டம் இங்கு நடக்கும்.* முதல் மாடியில் 144 துாண்கள் உள்ளன. ஒரு துாணின் நீளம் 27 அடி. 12 நுழைவு வாயில்கள் உள்ளன.* 'கேட் நம்பர்-1' பிரதான நுழைவு வாயிலாக உள்ளது.* இடப்பற்றாக் குறை ஏற்பட்டதால் 1956ல் கூடுதலாக இரண்டு மாடிகள் கட்டப்பட்டன.* தற்போது 93 ஆண்டுக்குப் பின் புதிய பார்லிமென்ட் கட்டப்படுகிறது.காரணம் ஏன்பழைய கட்டடத்தை நவீன வசதிகளுடன் மேம்படுத்த முடியாதது, நில நடுக்கம் போன்ற காரணங்களால் புதிய பார்லிமென்ட் கட்டப்படுகிறது.