உள்ளூர் செய்திகள்

ராமர் ராஜ்யம்

ஆக.5: அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. பிரமாண்டமான ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை ஆக. 5ல் நடந்தது. 2000 புனித தலங்களில் இருந்து மண், 100க்கும் மேற்பட்ட ஆறுகளில் இருந்து நீரும் வரவழைக்கப்பட்டன. பகல் 12:40 மணிக்கு கோயில் கருவறை அமையும் இடத்தில் 40 கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட செங்கலை வைத்து பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அவர் கூறுகையில், ''இந்தியர்களின் 500 ஆண்டு கால கனவு நனவாகியுள்ளது,'' என்றார்.251உ.பி.,யின் சரயு நதிக்கரையில் தான் அயோத்தி அமைந்துள்ளது. இங்கு கோயில் கட்டப்படுவதை அடுத்து சரயு நதிக்கரையில் 600 ஏக்கர் பரப்பளவில் 'ஹைடெக்' நகரம் அமையவுள்ளது. 251 மீ., உயரத்தில் ராமருக்கு சிலை நிறுவப்படுகிறது. பீடம் 50 மீ., சிலையின் உயரம் 151 மீ., இதற்கு மேல் குடை 20 மீ., உயரம் இருக்கும். ரூ. 2500 கோடி மதிப்பில் உருவாகும் இந்தச் சிலை உலகின் உயரமானதாக இருக்கும்.4ராமர் கோயிலை சுற்றி அதைவிட சிறிய அளவில் 4 கோயில் கட்டப்பட உள்ளன.நிறைவேறிய சபதம்ராமர் கோயில் பணிகளில் மோடி தவறாமல் பங்கேற்பார். 1991ல் முரளி மனோகர் ஜோஷியின் 'ஒற்றுமை யாத்திரையின்' போது அயோத்திக்கு உடன் சென்றார். அங்கு நிருபர்களிடம் மோடியை காட்டி, 'இவர் தான் குஜராத் பா.ஜ., தலைவர்,' என ஜோஷி அறிமுகம் செய்தார். மோடியிடம் நிருபர்கள் 'அடுத்த முறை அயோத்திக்கு எப்போது வருவீர்கள்?' என கேட்டனர். அதற்கு, 'ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவுக்கு வருவேன்' என்றார். சொன்னபடி ஆக. 5ல் அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார்.குழந்தை ராமர்ராம ஜென்ம பூமியில் ஏற்கனவே குழந்தை ராமர் சிலை உள்ளது. இதற்கு பூமி பூஜையின் போது நவரத்தின கற்கள் பதித்த பட்டாடை அணிவிக்கப்பட்டது. இங்கு சென்று வழிபட்ட பிரதமர் மோடி, இரவு நேரத்தில் மலர்ந்து நறுமணம் வீசும் பாரிஜாதபூச் செடி நட்டார்.ராமேஸ்வரம் மண்பூமி பூஜைக்கு ராமேஸ்வரம், அயோத்யாபட்டினம், கர்நாடகாவின் சாமுண்டீஸ்வரி மலை, ராஜஸ்தானின் ஜான்சி கோட்டை, சித்துார்கார், பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோயில், பத்ரிநாத்தில் இருந்து மண் சென்றது.திபெத்தின் மான்ஸ்ரோவர் ஏரி, கன்னியாகுமரி முக்கடல், திரிவேணி சங்கமம், காவிரி, துங்கபத்ரா, யமுனா, இமயமலையின் அலக்நந்த நதிகளில் இருந்து நீர் எடுத்து சென்றனர்.பெரியதுகோயிலின் கருவறை பெரியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.முதல் பிரதமர்ராம்ஜென்ம பூமிக்கு வருகை தந்த முதல் பிரதமர் மோடி. 10 வது நுாற்றாண்டில் இங்கு கட்டப்பட்ட அனுமன் கோயிலில் வழிபட்ட முதல் பிரதமரும் இவரே.மூன்றரை ஆண்டுகள்அயோத்தியில் ராமர் கோயிலை கட்டி முடிக்க மூன்றரை ஆண்டுகள் தேவைப்படும்.2.75 லட்சம்கோயில் கட்ட உலகம் முழுவதும் 1989 முதல் பக்தர்கள் அனுப்பிய 2.75 லட்சம் செங்கல் பயன்படுத்தப்பட உள்ளன. இதில் தமிழ், ஹிந்தி, உட்பட பல்வேறு மொழிகளில் 'ஸ்ரீராம்' என எழுதப்பட்டுள்ளது.10கோயில் கட்டுமானம் 10 ஏக்கரில் அமைகிறது.16கோயில் முன்பகுதி படியின் அகலம் 16 அடிவடிவமைப்புகுஜராத்தின் ஆமதாபாத்தை சேர்ந்த சோம்புரா குடும்பத்தினர் ராமர் கோயிலை வடிவமைத்துள்ளனர். 15 தலைமுறைகளாக ஸ்தபதிகளாக உள்ளனர். இந்தியாவில் அக் ஷார்தம், சோம்நாத் சுவாமி மற்றும் லண்டன் சுவாமி நாராயண் உட்பட 131 கோயில்களை வடிவமைத்துள்ளனர். 1989ல் சந்திரகாந்த் சோம்புரா தனது கால்களால் அளவெடுத்து வடிவமைத்தார். இவரது மேற் பார்வையில் அவரது மகன்கள் நிகில் 55, ஆஷிஷ் 49, இணைந்து ராமர் கோயிலை புதிதாக வடிமைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !