உள்ளூர் செய்திகள்

உலகம்

ஜனவரிஜன.7: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள பத்திரிகை அலுவலகத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் பலி.ஜன.9: ராஜபக் ஷே தோல்வி: இலங்கை அதிபராக இருந்த ராஜபக் ஷே மூன்றாவது முறையாக அதிபராகும் எண்ணத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்த உத்தரவிட்டார். இம்முறை அவரது கட்சியில் இருந்த சிறிசேன என்பவர் அதிபர் பதவிக்கு போட்டியிட்டார். தேர்தலில் தமிழர்களின் வாக்குகளும் சிறிசேனவுக்கு கிடைக்க, ஜன. 9ல், அவர் புதிய அதிபரானார். ராஜபக் ஷே தோல்வியைத் தழுவினார்.ஜன.20: இந்தியாவில் இருந்து மாம்பழம் இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் தடை.ஜன.23: சவுதி அரேபிய புதிய மன்னராக சல்மான் பொறுப்பேற்பு.பிப்ரவரிபிப்.5: தொடரும் விமான விபத்துகள்: கடந்தாண்டு போல இந்தாண்டும் விமான விபத்துகள் தொடர்ந்தன. பிப்., 5ம் தேதி தைவானில் 'டிரான்ஸ் ஆசியா' விமானம் கிளம்பிய சில நிமிடங்களில் ஆற்றில் விழுந்தது. 31 பேர் பலியாகினர். ஸ்பெயின் மற்றும் இந்தோனேஷியாவின் 2 விமானங்களும் விபத்துக்குள்ளாகின.பிப்.18: இந்தோனேசியாவின் ஏர் ஆசியா விமானம் நடு வானில் சென்ற போது தொடர்பு துண்டிக்கப்பட்டு விபத்துக்குள்ளானதில் 162 பேர் பலி.பிப்.23: அமெரிக்காவல் ஆஸ்கார் விழாவில் போர்ட்மென், தி கிராண்ட் புடாபெஸ்ட், ஒட்டல் ஆகிய படங்களுக்கு தலா 4 விருதுகள் கிடைத்தன.மார்ச்மார்ச் 14: பயங்கரவாத தொடர்பு வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபரும், எதிர்கட்சி தலைவருமான முகமது நசீத்துக்கு 13 ஆண்டு காவல்.மார்ச் 14: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மகாத்மா காந்திக்கு சிலை அமைக்கப் பட்டது. இதனை அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் மார்ச் 14ல், திறந்து வைத்தார். இதில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பங்கேற்றார்.மார்ச் 15: இங்கிலாந்து ராயல் சொசைட்டியின் தலைவராக நோபல் பரிசு பெற்ற இந்திய வம்சாவளி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் தேர்வு.மார்ச் 24: ஸ்பெயினில் இருந்து ஜெர்மனிக்கு சென்ற பயணிகள் விமானம் பிரான்சின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் விபத்துக்குள்ளானதில் 150 பேர் பலி.ஏப்ரல்ஏப்.1: இந்தியர்கள் மீட்பு: ஏமனில் உள்நாட்டுப் போர் மிக தீவிரமானது. இதில் அங்குள்ள இந்தியர்களும் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து மத்திய அரசு மீட்பு நடவடிக்கையை துவக்கியது. கடற்படை கப்பல் மற்றும் விமானம் அனுப்பப்பட்டு இந்திய தூதரகம் மூலம் இந்தியர்கள் ஓரிடத்தில் வரவழைக்கப்பட்டு, ஏப்.1ல் 4000 இந்தியர்கள் பத்திரமாக இந்தியா கொண்டு வரப்பட்டனர்.ஏப்.3: கென்ய பல்கலைக்கழகத்தில் சோமாலிய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 150 மாணவர்கள் பலி.ஏப்.21: போராட்டக்காரர்களை சுட்டு கொன்றதாக, எகிப்தின் முன்னாள் அதிபர் முகமது மோர்சிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு.ஏப்.21: 'மின்னல்' ரயில்: உலகிலேயே மிக வேகமாக, மணிக்கு 600 கி.மீ., வேகத்தில் செல்லும் ரயிலை, ஏப்.,21ல் ஜப்பான் வெற்றிகரமாக சோதனை செய்தது. இது 2027ல் பயன்பாட்டுக்கு வரும். இதற்கு முன் 2003ல் சோதனையின் போது, மணிக்கு 581 கி.மீ., வேகத்தில் ரயில் இயக்கப்பட்டது. இது நம் நாட்டு ரயிலைப் போல சக்கரத்தில் செல்வதில்லை, மின்காந்த அலைகள் மூலம் இயக்கப்படுகிறது.ஏப்.22: ஆப்ரிக்காவில் நிலவிய 'எபோலா' வைரஸ் நோய் செய்திகளை வெளியிட்ட நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு 'புலிட்சர்' விருது.ஏப்.26: நடுங்க வைத்த நிலநடுக்கம்: ஏப்., 26ம் தேதி நேபாளத்தின் பொக்ராவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. வரலாற்று சின்னங்கள் தரை மட்டமாகின. 10 ஆயிரம் பேர் பலி.ஏப்.28: அமெரிக்காவின் நியூயார்க் நகர கிரிமினல் கோர்ட் நீதிபதியாக தமிழ்பெண் ராஜேஸ்வரி பதவியேற்பு.மேமே 2: மீண்டும் டயானா: இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் கேட் மிடில்டன் தம்பதியினருக்கு மே 2ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இக்குட்டி இளவரசிக்கு சார்லட் எலிசபத் டயானா என பெயர் சூட்டப்பட்டது. இவர்களுக்கு ஏற்கனவே 2013 ஜூலையில் ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு ஜார்ஜ் என பெயரிடப்பட்டுள்ளது.மே 8: இங்கிலாந்தில் நடந்த பொது தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி. டேவிட் கேமரூன் மீண்டும் பிரதமராக பதவியேற்பு.மே 23: ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்வதற்கு அயர்லாந்து அனுமதி.மே 29: நைஜீரியாவின் புதிய அதிபராக முகமது புகாரி பதவியேற்பு.மே 30: ஜப்பானில் 7.8 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.ஜூன்ஜூன் 4: மொரீஷியசின் முதல் பெண் அதிபராக, அறிவியலாளர் அமினாஹ் குரிப் பக்கீம் பொறுப்பேற்பு.ஜூன் 24: டைடானிக் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னர் விமான விபத்தில் மரணம்.ஜூன் 29: இந்தோனேஷியாவின் 'சி130 ஹெர்குலஸ்' விமான விபத்தில் 116 பேர் பலி.ஜூன் 30: ஆப்கானிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டின் முதல் பெண் நீதிபதியாக அனிஷா ரசோவ்லி பதவியேற்பு.ஜூலைஜூலை 29: 'விண்டோஸ் 10' ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டது.ஜூலை 31: லிபியாவிலிருந்து நாடு திரும்ப முயன்ற இந்திய ஆசிரியர்கள் நான்கு பேரை ஐ.எஸ்.பயங்கரவாதிகள் கடத்தினர்.ஆகஸ்ட்ஆக.10: கூகுளில் தமிழ்: கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ.,) தமிழரான சுந்தர் பிச்சை ஆக., 10ல் நியமனம். சென்னையில் பிறந்த இவர் பள்ளிப்படிப்பை இங்கு முடித்து, காரக்பூர் ஐ.ஐ.டி.,யில் பி.டெக்., பட்டம் பெற்றார். ஸ்டான்போர்டு பல்கலையில் எம்.எஸ்., பட்டமும், வார்ட்ன் மேலாண்மை பள்ளியில் எம்.பி.ஏ.,வும் முடித்தார்.ஆக.18: இலங்கை பார்லிமென்ட் தேர்தலில் வெற்றி பெற்று ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பொறுப்பேற்றார். ஆக.20: கிரீசில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உலக பொருளாதாரத்தை பாதித்தது.ஆக.21: நிலாவின் சுற்றுவட்டப்பாதையில் நியான் வாயு இருப்பதற்காக சாத்தியக்கூறுகள் உள்ளன என 'நாசா' அனுப்பிய விண்கலம் கண்டுபிடித்தது.செப்டம்பர்செப்.3: தமிழருக்கு அங்கீகாரம்: இலங்கை பார்லிமென்ட் எதிர்க்கட்சி தலைவராக ஆர்.சம்பந்தன் செப்.3ம் தேதி பதவியேற்றார். இதன் மூலம் கடந்த 32 ஆண்டுகளில் தேர்தெடுக்கப்பட்ட முதல் தமிழ் எதிர்க்கட்சி தலைவரானார். 2004, 2010, 2015 ஆகிய ஆண்டுகளில்திரிகோணமலை தொகுதி எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.செப்.7: வட, தென் கொரிய நாடுகள் குடும்ப உறுப்பினர்களை ஒன்றிணைத்து கொள்ளும் ஒப்பந்தத்தில் கையெழுத்து.செப்.8: பாகிஸ்தானின் அலுவலக மொழியாக உருதை அங்கீகரித்து அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவு.செப்.9: நீண்ட கால ராணி: செப்.,9: இங்கிலாந்து அரச பரம்பரையில் அதிக காலம் ஆட்சியில் இருந்தவர் என்ற பெருமையை தற்போதையராணி இரண்டாம் எலிசபெத் பெற்றார். தனது தந்தை ஆறாம் ஜார்ஜ் இறந்த 1952, பிப்.6லிருந்து ராணியாக உள்ளார். தனது எள்ளு பாட்டி ராணி விக்டோரியாவின் சாதனையை 63 ஆண்டுகளுக்கு மேலாக ராணியாக இருந்து முறியடித்துள்ளார்.செப்.15: ஆஸ்திரேலியாவின் 29வது பிரதமராக மால்கம் டர்ன்புல் பதவியேற்பு.செப்.19: எகிப்து நாட்டின் பிரதமராக ஷெரீப் இஸ்மாயில் பதவியேற்பு.செப்.20: நேபாளத்தின் தேசிய விலங்காக பசு அறிவிப்பு.செப்.24: அன்னை தெரசா இந்தியாவில் ஆதரவற்றவர்களுக்கும், ஏழை களுக்கும் தொண்டு செய்ய தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார். இரண்டு அதிசயங்களை நிகழ்த்தியதற்காக 2016 செப்., 24ல் புனிதர் பட்டம் வழங்கப்படும் என போப் அறிவிப்பு.செப்.24: மெக்கா சோகம்: புனித யாத்திரையின் போது செப்., 24ம் தேதி மெக்கா அருகே மினாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 310 பேர் பலியாகினர்.செப்.30: நியூயார்க்கில் உள்ள ஐ.நா., தலைமையகத்தில் பாலஸ்தீனத்தின் தேசிய கொடி முதல் முதலில் ஏற்றப்பட்டது.அக்டோபர்அக்.4: போர்ச்சுகல் பிரதமராக பெட்ரோ பாசோஸ் மீண்டும் பதவியேற்பு.அக்.6: இயற்பியலுக்கான நோபல் பரிசு(2015) நியூட்ரினோ குறித்த ஆராய்ச்சிக்கு மெக்டொனால்டு மற்றும் தகாகி கஜிதா இணைந்து பெற்றனர்.அக்.13: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாலஸ்தீனத்தின் அல் குவாட்ஸ் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.* திபெத் பகுதியில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே புதிய நீர்மின்சார நிலையத்தை சீனா துவக்கியது.அக்.15: ஜனாதிபதி பிரணாப்பின் இஸ்ரேல் சுற்றுப்பயணத்தின் போது இந்தியா, இஸ்ரேல் இடையே 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து.அக்.19: கனடாவின் பிரதமராக ஜஸ்டின் டிரன்டீவ் தேர்வு.அக்.25: கவுதமாலா நாட்டின் அதிபராக நகைச்சுவை நடிகர் ஜிம்மி மாரல்ஸ் தேர்வு.* மனிதனை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை ரஷ்யா 2029ல் நிறைவேற்றவுள்ளது.அக்.29: சீனாவில் நடைமுறையில் உள்ள ஒரு குழந்தை திட்டத்தை கைவிட அந்நாட்டு அரசு முடிவு.நவம்பர்நவ.5: தான்சானியா நாட்டின் முதல் பெண் துணை அதிபராக சமியா சலுகு பதவியேற்பு.நவ.13: பதறிய பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நவ., 13ல் ஆறு இடங்களில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தியதில் 130 பேர் பலி.நவ.22: பத்தாவது கிழக்காசிய மாநாடு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது. மோடி பங்கேற்றார்.நவ.25: வெப்பமான ஆண்டாக 2015, பதிவாகி உள்ளதாக சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையம் தகவல்.டிசம்பர்டிச.9: டைம்ஸ் நாளிதழின் '2015ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த நபராக' ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் தேர்வு.டிச.12: சவுதி அரேபியாவில் நகராட்சி தேர்தல்களில் முதன்முறையாக பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது.டிச.17: கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தின் ஐகோர்ட் நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த வள்ளியம்மை நியமனம்.டிச.21: 'மிஸ் யுனிவர்ஸ்' குழப்பம்: 2015ம் 'மிஸ் யுனிவர்ஸ்' போட்டி டிச., 21ல் அமெரிக்காவில் நடந்தது. இறுதிச் சுற்றில் 10 பேர் கலந்து கொண்டனர். இதில் பிலிப்பைன்சின் 26 வயது அழகி அலோன்சா வர்ட்ஸ்பர்க், உலக அழகியாக தேர்வு. முன்னதாக நிகழ்ச்சி தொகுப்பாளர் ஸ்டீவ் ஹார்வி, கொலம்பியாவின் 21 வயது அழகி அரியட்னா குடியர்ரெஸ் என்பவர் வெற்றி பெற்றார் என தவறுதலாக அறிவித்து விட்டார். அவருக்கு வெற்றி கிரீடமும் அணிவிக்கப்பட்டு விட்டது. பின் தான் அரியட்னா 2வது இடம் பிடித்தவர் என்பது தெரிந்தது.டிச.28: வட தென்அமெரிக்க நாடுகளில் கனமழை. 24 பேர் பலி.சிரியா சோகம்: சிரியாவில் உள்நாட்டுப் போர் இந்த ஆண்டு மிக தீவிரமானது. லட்சக்கணக்கானோர் வீடு, உடமைகள், உறவுகளை இழந்தனர். இதில், அகதிகளாக கப்பலில் சென்றவர்களில் அயிலான் என்ற சிறுவனின் சடலம் மத்திய தரைக்கடல் பகுதியில் ஒதுங்கியது. இதை பார்த்தவர்களின் நெஞ்சங்கள் பதறின. இச்சோகத்துக்குப் பின் பல நாடுகள் சிரிய அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க முன் வந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !