கவிதைச் சோலை!
மாறாதது!கடலேதும்வற்றியிருக்கிறதாஉலகில்!கனவிலேனும்சுட்டிருக்கிறதாநிலவு!என்றாவதுமேற்கில் உதித்திருக்கிறதாசூரியன்!கணமேனும்சுருங்கியிருக்கிறதாதன்னளவில் வானம்எப்போதாவது வந்தாலும்தன் வண்ணத்திலிருந்துமாறியிருக்கிறதா வானவில்!எப்போது பொழிந்தாலும்பூமியை நோக்கி தானேஇந்த மழை!மாறவே மாறாதஇயற்கையை போல் தான்இருக்கிறேன் நானும்...தீராத கடலோடும்தீர்ந்து விடாதஉன் நினைவுகளோடும்!— இ.எஸ்.லலிதாமதி, சென்னை.