உள்ளூர் செய்திகள்

அனாதை யானைகளுக்கான சரணாலயம்!

இலங்கையில், கிகாலே நகரிலிருந்து, 13 கி.மீ., தொலைவில், சாம்புகாமுவா என்ற இடத்தில் உள்ளது, யானைகள் சரணாலயம். இலங்கை காடுகளில், அனாதையாக சுற்றித் திரிந்த ஐந்து யானைக் குட்டிகளை அழைத்து வந்து, 1975ல் ஆரம்பிக்கப்பட்டது தான், இந்த சரணாலயம். இப்போது, இங்கு, 75க்கும் மேற்பட்ட அனாதை யானைகள் பராமரிக்கப்படுகின்றன. நம் நாட்டில், யானைகளின் கால்களில் பெரிய சங்கிலி போட்டு கட்டியிருப்பர். அது, அவற்றின் கால்களில் அழுத்தி, காயம் பட்டு, சீழ் வடிந்து, பார்க்கவே பரிதாபமாக இருக்கும். ஆனால், இங்குள்ள யானைகளுக்கு, சங்கிலி தொல்லை இல்லை.—ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !