உள்ளூர் செய்திகள்

நர மாமிசம் ருசிக்கும் விநோத தம்பதி!

கதைகளில் தான் படித்திருப்போம், நர மாமிசம் புசிக்கும் வினோத மனிதர்களைப் பற்றி! ஆனால், ரஷ்யாவில் ஒரு தம்பதியை, நர மாமிசம் புசித்ததற்காக கைது செய்துள்ளனர்.ரஷ்யா நாட்டை சேர்ந்தவர், டிமிட்ரி பக்சேவ்; வயது: 35. இவர் மனைவி, நடாலியா; 45 வயது. இத்தம்பதி, 18 ஆண்டுகளாக, 30 பேரை கொன்று, அவர்களின் மாமிசத்தை, சமைத்து சாப்பிட்டு வந்துள்ளனர்.அக்கம் பக்கதினர் மூலம் இவ்விஷயம் கசிய, போலீசார் அவர்கள் வீட்டை திடீர் சோதனை நடத்திய போது, எட்டு மனித உறுப்புகள் மற்றும் சதைகள் இருந்துள்ளன. குளிர் சாதன பெட்டியில், மனித மாமிசத்தை சேமித்து வைத்துள்ளனர். அத்துடன், சில மனித உறுப்புகளை ஜாடியில், ஊறுகாய் போன்று ஊற வைத்திருந்ததையும் கைப்பற்றியுள்ளனர்.அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட போது, கடந்த, 18 ஆண்டுகளாக, தாங்கள் மனித மாமிசம் சாப்பிட்டு வருதாகவும், 30 பேரைக் கொன்று சமைத்து சாப்பிட்டதாகவும் கூறியுள்ளனர். இது, ரஷ்யாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !