அம்மாடியோ எம்மாம் பெரிய கைகள்!
தாய்லாந்தில் வசிக்கும் டுவாங்ஜே சமக்சமம் என்ற, 59 வயது பெண்மணியின் கைகள் தான், உலகிலேயே மிகப் பெரிய கைகள். உடல் நல குறைபாட்டால் இவரது கைகள் நாளுக்கு நாள் வீங்குகிறது. இதனால், கைகளில் ஏற்படும் அதிக எடையால், வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார். நோய் தாக்கியது முதல், 20 ஆண்டுகள் வெளியே வராமல் மறைந்தே வாழ்ந்தவர், தற்போது, வயிற்றுப் பிழைப்புக்காக சிறிய கடை வைத்து, தன் பெற்றோரை காப்பாற்றி வருகிறார்.— ஜோல்னாபையன்.