உள்ளூர் செய்திகள்

கொலுவில் அம்பிகை தத்துவம்!

கொலுவில், ஐந்து, ஏழு, ஒன்பது என்ற கணக்கில் படிகள் அமைப்பர்.அம்பிகை கொலு வீற்றிருக்கும் போது, அவளிடமிருந்து, ஒன்பது சக்திகள் பிரிந்து, நம்மை காப்பதாக, ஐதீகம். அவர்கள், கங்கா தேவி, ஸ்ரீதுளசி தேவி, ஸ்ரீமானஸா தேவி, ஸ்ரீசஸ்டி தேவி மற்றும் ஸ்ரீமங்களா சண்டிகா தேவி ஆகியோர். கொலுவில் இவர்கள் சூட்சமமாக அமர்ந்திருப்பதை குறிக்கவே, ஐந்து படிகள்.ஏழு படிகள் வைப்பதன் காரணம்: தேவிக்கு படைத் தலைவிகளாக அபிராமி, மகேஸ்வரி, கவுமாரி, நாராயணி, வாராஹி, ருத்திராணி மற்றும் காளி ஆகிய ஏழு பேரும் சுற்றிலும் நிற்பதாக, 'தேவி மகாத்மியம்' கூறுகிறது.ஒன்பது படிகள் வைப்பதற்கான இன்னொரு காரணமும் உண்டு. நவராத்திரி காலத்தில், அம்பிகை முதல் படியிலிருந்து கடைசி படி வரை, தினம் ஒரு படியில் வாசம் செய்தவாறு படி ஏறுகிறாள். அதனால் தான், குமாரிகா, திரிமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளிகா, சண்டிகா, சாம்பவி மற்றும் துர்கா தேவியாக வழிபடுகிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !