உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்

எ.தட்சணாமூர்த்தி, விழுப்புரம்: டென்ஷனாகாமல், நிம்மதியாக, சந்தோஷமாக இருக்க வழி சொல்லுங்களேன். எனக்கு மூக்கு நுனியில் வரும் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் தான் கேட்கிறேன்...இதற்கு மனப்பயிற்சி அவசியம். 'நான் கோபப்பட மாட்டேன்; எனக்கு, கோபமே வராது...' என, ஜபம் போல் திரும்பத் திரும்ப உங்களுக்குள்ளே சொல்லிக் கொள்ளுங்கள். கடவுள் நம்பிக்கை உடையவராக இருந்தால், 'கோபத்தை என்னிடமிருந்து அகற்று...' என, தினமும் வேண்டுங்கள். இந்த மனப்பயிற்சி, நாளாவட்டத்தில் கோபத்தை நிச்சயம் போக்கி விடும். அப்புறம், ஏது டென்ஷன்!என்.பாண்டியராஜ், விருதுநகர்: மகனை விலைபேசி பெற்றோர் நடத்தி வைக்கும் திருமணங்களை, புனிதமான பந்தங்களாக உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா?கை நீட்டி காசு வாங்கிய பின், அங்கே புனிதம் எங்கிருந்து வரும். இதில், பெற்றோரை குற்றவாளிகளாக முதன்மைப்படுத்துவது தவறு; விலை போகும் ஆண் மகன், புத்தியை, 'சேட்' கடையிலா வைத்திருக்கிறான்?ஜி.சந்திரசேகரன், கோவை: உலகில் கவலையே இல்லாத மனிதர்கள் யார்?இருவகை மனிதர்கள் கவலைப்படுவதே இல்லை. முதலாமவன், பற்றற்றவன்; அடுத்தவன், பருத்த பர்ஸ் உள்ளவன். முதலாமவனைப் பற்றி சிந்திக்கவே வேண்டாம்; இரண்டாமவன், பருத்த பர்சின் மூலம் கவலைகளை எப்படியாவது ஓட வைத்து விடுகிறான்! ம.சுதாமன், சென்னை: ஒருவருக்கு பணம், பதவி, புகழ் இருந்தால் போதும் தானே... எதையும் சாதிக்க முடியும் அல்லவா?உலக விஷயங்கள் - 'மெட்டீரியலிஸ்டிக் திங்க்ஸ்' வேண்டுமானால் சாதித்துக் கொள்ள லாம்; மன நிம்மதி! இரவில், தலையணை... வேண்டாம்... கையை தலைக்கு கொடுத்து, கண்ணை மூடினால், அடுத்த நிமிடம், நிம்மதியாக உறக்கம் வரவேண்டும். இந்த நிம்மதி, நீங்கள் கூறிய மூன்றும் இருந்தால் கூட சாதித்துக் கொள்ள இயலாது.கே.ரமேஷ், சென்னை: ஆபிஸ் போய் வருவோருக்கு ஆறு மணியோடு டென்ஷன் போய் விடுகிறது. ஆனால், உங்களைப் போன்றவர்கள், சதா 24 மணி நேரமும் சிந்திப்பதால் சலிக்காதா?சிந்திக்கத் தானே சம்பளம் தருகின்றனர். சம்பளம், 'கட்' ஆகிவிடும் என்ற சிந்தனை வரும்போது, சலிப்பு எங்கிருந்து வரும்! எஸ்.பி.தனபாக்கியம், உடுமலைப்பேட்டை: சொர்க்கம், நரகம் என்றெல்லாம் சொல் கின்றனரே... அவை எங்குள்ளன?சொர்க்கம், நரகம் எல்லாம், ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளே தான் இருக்கிறது. அவரவர் நடவடிக்கைப்படி சொர்க்கத்திலும் வாசம் செய்யலாம்; நரகத்தில் விழுந்து உழலவும் செய்யலாம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !