உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

எம். கோவிந்தன், விழுப்புரம்: மீண்டும் சசிகலாவின் அரசியல் பிரவேசம், அ.தி.மு.க.,விற்கு பலமா, பலவீனமா?பலம் என்றால், சசிகலாவை கண்டித்து, அ.தி.மு.க., தலைமை தீர்மானம் நிறைவேற்றுமா! * என். காளிதாஸ், சிதம்பரம்: 'டாஸ்மாக்' கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளாரே...இதனால், உ.பா., பிரியர்களுக்கு செலவு தான் அதிகரிக்கும்!உ.பா., கடை எங்குள்ளதோ அதைத் தேடி தமது, 'டூ - வீலரில்' செல்வர். உ.பா., முடித்து திரும்பும்போது விபத்தில் சிக்குவர்; இதுதான் நடக்கப் போகிறது! ஆ. மாணிக்கம், பொள்ளாச்சி: சின்னத்திரை, 'சீரியல்'களில், கணவரின் பெயரைச் சொல்லி, மனைவி அழைக்கும் பழக்கம் அதிகமாகி விட்டதே...நான், நேரத்தை வீணாக்க விரும்பாதவன்; அதனால், சின்னத்திரை நாடகங்கள் எதுவும் பார்ப்பதில்லை. மன்னிக்கவும்... என்னிடம் இதற்கேதும் பதிலில்லை!த. நேரு, வெண்கரும்பூர், கடலுார்: பள்ளி ஆசிரியரிடம், நீங்கள் அதிகமாக அடி வாங்கியதுண்டா?ம்... ஹும்! ஒன்பதாவது படிக்கும்போது, மதிய உணவு முடித்த பின், காவிரியில் குளித்து விட்டு, ஈர அரை டவுசருடன் பள்ளி வருவோம். கணக்கு வகுப்பு ஆரம்பித்திருக்கும். உடன் வந்த மாணவர்களை முட்டிக்கால் போட வைத்து விடுவார் ஆசிரியர்; என்னை மட்டும் உள்ளே அனுமதித்து விடுவார்!* என்.ஜே. ரவி விக்னேஷ், திருப்பூர்: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் என்ன செய்து கொண்டிருக்கிறார்?தினமும், 10 பக்க அறிக்கை வெளியிட்டுக் கொண்டுள்ளார். அது, அவர்கள் கட்சி, 'டிவி'யான, மக்கள் 'டிவி'யில் மட்டுமே முழுமையாக ஒளிபரப்பப்படுகிறது. செய்தித்தாள்களில், 'டிசி' செய்தி எனும்படி, இரண்டு பத்திகளில், 'எடிட்' செய்து வெளியிடப்படுகிறது!கோ. குப்புசாமி, சங்கராபுரம்: அமெரிக்கா போன்று, நம் நாட்டிலும், ஓட்டுச் சீட்டு முறையை பயன்படுத்த முடியாதா?நம் நாட்டில் ஜனத்தொகை அதிகம். ஓட்டுச் சீட்டு முறையால், அநாவசிய வேலை அதிகரிக்கும். ஓட்டு மிஷினில் என்ன குறை கண்டீர்கள்? அதில் முறைகேடு செய்ய முடியும் என்றால், மீண்டும், அ.தி.மு.க., தானே ஆட்சியைப் பிடித்திருக்கும்!* ஆர். மீனாட்சி, தென்காசி: மதத் துறவிகளை பெண்கள் இன்றும் நம்புகின்றனரா?எனக்குத் தெரிந்த வரை, காஞ்சி மகா பெரியவரைத் தான் நம்புகின்றனர், பெண்கள். துறவி என்ற பெயரால், பலர், பாலியல் குற்றங்களில் அல்லவா ஈடுபடுகின்றனர்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !