அந்துமணி பதில்கள்!
உங்களுக்கு உதவி செய்யும் உற்ற நண்பனாக, மனதை மாற்றி கொள்ளுங்கள். நினைத்த காரியங்களுக்கு விரோதியாக மனதை மாற்றி கொள்ளக் கூடாது... அப்படி செய்தால், தனக்குத் தானே விரோதியாகி விடுவார்! இல்லை என்றே தோன்றுகிறது... முதல்வர், ஸ்டாலினே, 'சென்னையின் முக்கிய பகுதிகளில் மழை நீர் தேங்காது என்று ஓரளவு நம்புகிறேன்...' எனக் கூறியுள்ளாரே... அவருக்கே முழு நம்பிக்கை இல்லையே!லலிதா அசோக், நாகப்பட்டினம்:வாழ்வில் வெற்றி பெற உதவுவது பட்டறிவா, படிப்பறிவா?இரண்டாவது ஓரளவுக்கு உதவும்; முதலாவது ரொம்ப முக்கியம். ஏற்கனவே பட்டறிவு பெற்றவர்களிடம் அதைப் பெற்றுக் கொள்வது லாபகரமானது!டாடாக்கள், பிர்லாக்கள், அம்பானிகள், அதானிகள் அல்லர்; இவர்களுக்கெல்லாம், கம்பெனி பெயரில் தான் சொத்துக்கள் உள்ளன. ஆனால், நம் அரசியல்வாதிகள் சிலரிடம், தனிப்பட்ட முறையிலேயே, 200 கோடி முதல், 2,000 கோடி ரூபாய் வரை உள்ளது. ஆட்சியில் உள்ள - இருந்த அரசியல் தலைவர்கள் தான், இன்று இந்தியாவிலேயே பெரிய பணக்காரர்கள்! முயன்று கொண்டே இருக்கிறேன்... நெல்லை, குமரித் தமிழ் சூப்பராகவும், கொங்குத் தமிழ் கொஞ்சம் பேசத் தெரியும்! ஜப்பானைப் பின்பற்ற வேண்டியது தான்; தன் உற்பத்திப் பொருட்களை ஏராளமாக வெளிநாடுகளுக்கு விற்கிறது. இதனால், கோடிக்கணக்கான ரூபாய் அன்னிய செலாவணி கிடைக்கிறது. எவ்வளவுக்கு எவ்வளவு ஏற்றுமதி செய்கிறோமோ, அவ்வளவு வெளிநாட்டுக் கடன் தீர்ந்து விடும்! ஒருவன் அறிஞன் என்பதை சரித்திரம் தான் சொல்ல வேண்டும். இங்குள்ள, 'சோ கால்டு' அறிஞர்கள், 'பப்ளிசிட்டி'க்கு அலைஞ்சான்களாக அல்லவா இருக்கின்றனர்!இல்லவே இல்லை... 'ரப்பர் ஸ்டாம்ப்' ஆகவே செயல்படுவார்! இது, உறுதி!