அந்துமணி பதில்கள்
ஒருநாளும் தேறப் போவதில்லை... அவர் முகமாவது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?திறமை... சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் திறமை. இதைக் கோட்டை விட்டவர்கள் பின்னர் வருந்துகின்றனர்!பொறாமை, பேராசை, முன்கோபம், தீய செயல் ஆகியவற்றை, குற்றங்களாக கருதி, அவற்றை அறவே நீக்குவதே சிறந்த அறமாகும்!எல்லாவற்றுக்கும் கட்டணம் ஏற்றி விட்டனர்... அதைப்பற்றி மக்கள் பேசாமல் இருப்பதற்குத்தான், மந்திரிகளை இப்படி எல்லாம் பேச ஏவி விட்டுள்ளார், முதல்வர் ஸ்டாலின்!தமிழில் லஞ்சம் என்பதை, கேவலமான வார்த்தையாகக் கருதுகின்றனர்... அதனால், அதை ஆங்கிலத்தில், கமிஷன் என்று கூறுகின்றனர்!முதலில், பொறுமை, இரண்டாவதாக சாந்த குணம், மூன்றாவதாக அறிவு, கடைசியில், அன்பும் மிக முக்கியம்!இப்போது, அவர் செய்து கொண்டிருப்பதெல்லாம் பொழுது போக்குத்தானே... இதுக்கு மேல, நம்மிடம், 'ஐடியா' எதற்கு!வெற்றிக்கு தேவை, விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் சளைக்காத மனம். இவற்றுடன், நுண்ணறிவு தேவை. இதுவே, வெற்றியை எளிதாக்கும்!