அந்துமணி பதில்கள்!
எம். லதா, சென்னை: 'நான் கிறிஸ்தவன் தான்; என் காதல் மனைவி, கிறிஸ்தவ மதத்தவர்...' என்று, தமிழக அமைச்சர், உதயநிதி பெருமை பேசியுள்ளாரே...'வெரிகுட்...' இவர், ஈ.வெ.ரா.,வின் ஆதரவாளர் இல்லை என்பதை தெரிவித்து விட்டார்! ஆனால், தன் பெயரை, ஜான், ஜோசப், பீட்டர் என, கிறிஸ்தவ பெயராக மாற்றிக் கொள்ளாதது ஏனோ!* அ. சண்முகம், நெல்லை: மதுப் பிரியர்கள் திருந்தி விட்டால், தமிழகத்தில் மதுவை ஒழித்து விட முடியுமா?மதுப் பிரியர்களை யார் தான் திருத்தப் போகின்றனர்... அவர்களை திருத்தவே முடியாது. மதுவை ஒழித்து விட்டால், அரசுக்கு வருமானமே கிடையாது. எனவே, மது ஒழிப்பு வெறும் கனவு தான்!த. நேரு, வெண்கருப்பூர், கடலுார்: திருமணம் செய்யப்போகும், என் சகோதரிக்கு, நீங்கள் கூறும் அறிவுரை என்ன?திருமணம் செய்து வாழப்போகும் வீட்டில், அவர்கள் வீட்டு பெண் போலவே நடந்து கொள்ளச் சொல்லுங்கள்!* ப. காளிதாசன், வேட்டனுார், புதுக்கோட்டை: 'மது ஒழிப்பு வேறு எந்தக் கட்சியும் செய்யாது; நாங்கள் மட்டுமே ஒழிப்போம்...' என்கிறாரே, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்...அப்படியானால் தமிழகத்தில், 90 சதவீத ஆண்களின் ஓட்டுக்களை பெற முடியாது... இவர்களால் ஆட்சிக்கும் வர முடியாது!* மு. நாகூர், சாத்தக்கோன், வலசை: 'அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்தால் தான், பா.ஜ.,வை வீழ்த்த முடியும்...' என்று, வைகோ கூறியுள்ளாரே?இவர் போன்ற அரசியல் ஜோதிடர்கள் சொல்வது எதுவும் நடக்காது... எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பே இல்லை!கே. சுவாமிநாதன், நெல்லை: நான் பெரிய குடும்பஸ்தன்... யாருக்காக வாழ நினைக்க வேண்டும்?உங்களை விரும்புவோருக்காக வாழ வேண்டும்; உங்களை வெறுப்போர் முன் வாழ்ந்து காட்ட வேண்டும்!வி. ராஜ்குமார், சென்னை: நான் ஆரோக்கியமாக இருக்க விரும்புகிறேன்... என்ன செய்ய வேண்டும்?எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள்; அப்போது, ஆரோக்கியம் கிடைத்து விடும்!சோ. சுந்தரம், கோவை: என் நண்பனை நினைத்தால் கோபம் வருகிறதே...யாரிடமும் கோபம் கொள்ளாதீர்கள், கோபம் கொள்வதை மறந்து விடுங்கள். கோபம் கொள்வதால், பல தீமைகள் வந்து சேருகின்றன.