மாட்டிறைச்சி உடை!
அமெரிக்காவில், லேடி காகா என்பவர், பிரபலமான பாப் பாடகி. பேஷன் என்ற பெயரில், இவர் எப்போதும் வித்தியாசமான தோற்றத்துடன் தான் காட்சி அளிப்பார். இவரைப் பார்த்து, பிரபல இந்தி நடிகை தனிஷா சிங், ஒரு கிறுக்குத்தனமான வேலையை செய்துள்ளார்.சமீபத்தில், ஒரு பேஷன் ஷோவில் பங்கேற்ற இவர், மாட்டிறைச்சியை, உடைபோல் உடலில், தொங்க விட்டு, வந்தார். அவரின் இந்த கோலத்தை பார்த்தவர்கள், தலையில் அடித்து கொண்டனர். விலங்குகள் நல ஆர்வலர்கள், அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தனிஷாவோ,'பேஷனுக்காகத் தான், இப்படி வித்தியாசமான உடை அணிந்துள்ளேன். மற்றபடி, நான் முழு சைவம். அசைவ வகையறாக்களை சாப்பிடவே மாட்டேன்...' என, பெருமை அடித்து கொண்டார்.— ஜோல்னாபையன்.