உள்ளூர் செய்திகள்

குழந்தைகளின் மகிழ்ச்சியே போதும்!

கேரளாவில் உள்ள மலப்புறம் வளாஞ்சேரி என்ற ஊரைச் சேர்ந்தவர் சுபீத். ஆசிரியர்களாக பணிபுரியும் சுகுமாரன், புஷ்பார்ஜினி தம்பதியின் மகனான இவர், கோட்டயம் ராஜீவ் காந்தி இன்ஜினியரிங் கல்லூரியில் அதிக மதிப்பெண் பெற்று, பி-டெக் முடித்தார். பின், டில்லி ஐ.ஐ.டி.,யில், எம்-டிசைனிங்கிலும், சிறந்த முறையில் தேர்வு பெற்றார். உடன் படித்தவர்கள், ஹோண்டா போன்ற பெரிய நிறுவனங்களில் சேர்ந்து, அதிக சம்பளம் வாங்கி வரும் நிலையில், இவர், குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்காத, பொம்மைகளை உருவாக்கி, கோவில் திருவிழாக்களில் விற்பனை செய்து, அந்த வருமானத்தில் எளிமையாக வாழ்கிறார்.இவரது தாயார் மறைந்த பின், தந்தை மறுமணம் செய்து கொண்டார். அதனால், வீட்டை விட்டு வெளியேறிய சுபீத், 'நான் உருவாக்கிய பொம்மைகளை வைத்து விளையாடும் குழந்தைகளின் முகத்தில் காணப்படும் அந்த மகிழ்ச்சியே எனக்கு போதும்...' என்கிறார். வித்தியாசமான இளைஞர்!— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !