உள்ளூர் செய்திகள்

குளிர் கால உணவுகள்!

திரிகடுக குழம்பு!தேவையான பொருட்கள்:சுக்கு - ஒரு துண்டு, மிளகு - ஒரு தேக்கரண்டி, அரிசி திப்பிலி - 4, புளி - நெல்லிக்காய் அளவு, சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 10 பல், வத்த குழம்பு பொடி - ஒரு தேக்கரண்டி, கடுகு, கடலை பருப்பு, வெந்தயம் - தலா கால் தேக்கரண்டி, மஞ்சள் துாள் - ஒரு சிட்டிகை, நல்லெண்ணெய், உப்பு, கறிவேப்பிலை தேவையான அளவு.செய்முறை: வாணலியில், சுக்கு, மிளகு, அரிசி திப்பிலியை வறுத்து, ஆறியதும், அதனுடன், ஐந்து சின்ன வெங்காயம், ஐந்து பூண்டு பல் சேர்த்து விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, கடலை பருப்பு, வெந்தயம் சேர்த்து தாளித்து, மீதமுள்ள வெங்காயம், பூண்டு, மஞ்சள் துாள் சேர்த்து வதக்கி, புளி கரைசலில் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பச்சை வாசனை போனதும், அரைத்த விழுது, வத்த குழம்பு பொடி, கறிவேப்பிலையை சேர்க்கவும். குழம்பு கெட்டியானதும் இறக்கி, சூடான சாதத்துடன் பரிமாறவும்.தவா புலாவ்!தேவையான பொருட்கள்: வடித்த சாதம் - ஒரு கப், உருளைக்கிழங்கு, வெங்காயம், குடை மிளகாய் - தலா ஒன்று, பச்சை மிளகாய் - 2, தக்காளி - 3, இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி, வேக வைத்த பச்சை பட்டாணி - அரை கப், பாவ் பாஜி மசாலா துாள் - 2 தேக்கரண்டி, வெண்ணெய் - 4 தேக்கரண்டி, கொத்தமல்லி, உப்பு தேவையான அளவு.செய்முறை:தவாவில் வெண்ணெயை உருக்கி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, பாவ் பாஜி மசாலா துாள் சேர்த்து கலக்கவும். பின், சதுரமாக நறுக்கிய குடை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் தெளித்து வேக விடவும். பிறகு, பச்சை பட்டாணி, பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு, வடித்த சாதம், கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !